கரோலின் வோஸ்னியாக்கி
கரோலின் வோசுனியாக்கி (Caroline Wozniacki, பிறப்பு: 11 சூலை 1990) டென்மார்க் நாட்டுத் தொழில்முறை டென்னிசுக்காரர் ஆவார். மகளிர் டென்னிசு சங்கத்தின் (WTA) தற்போதைய முதல் தரநிலையில் உள்ள டென்னிசு வீராங்கனை. இந்நிலையில், ஆகத்து 29,2011 வரை தொடர்ந்து 46 வாரங்களாக இருந்து வருபவர்.[4] இத்தகைய உயர்நிலையை அடைந்துள்ள முதல் டேனிசு நாட்டவராகவும் விளங்குகிறார்.[5] 2005ஆம் ஆண்டில் மகளிர் டென்னிசு சங்கப் போட்டிகளில் ஆடத்துவங்கிய கரோலின் ஒவ்வொரு ஆண்டும் தனது ஆண்டிறுதி தரநிலையை மேம்படுத்தி வந்து 2010ஆம் ஆண்டு தற்போதைய உயர்நிலையை அடைந்துள்ளார். ஆகத்து 2011 வரை 18 மகளிர் ஒற்றையர் பட்டங்களை வென்றுளார்.[6] 2009ஆம் ஆண்டு அமெரிக்க ஓப்பனிலும் 2010 மகளிர் சங்க தோகா போட்டியிலும் இரண்டாவதாக வந்தார். 2006ஆம் ஆண்டில் விம்பிள்டன் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றாலும் இதுவரை மகளிர் பெருவெற்றித் தொடர் பட்டமெதுவம் வெல்லவில்லை. இரட்டையர் ஆட்டத்தில் இருமுறை மகளிர் சங்க பட்டங்களை வென்றுள்ளார். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia