கரோஷ்டி எழுத்துமுறை
கரோஷ்டி எழுத்துமுறை அல்லது காந்தாரி எழுத்துமுறை என்பது அபுகிடா வகையை சார்ந்த ஒர் எழுத்துமுறை ஆகும். இவ்வெழுத்துமுறை இந்திய துணைக்கண்டத்தின், வடமேற்கு பகுதியின் காந்தார பிரதேசத்தில் காந்தாரி மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்டது. இவ்வெழுத்துமுறை கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மத்தியில் வழக்கில் இருந்த இவ்வெழுத்துமுறை தன் தாய் நிலத்திலேயே கி.பி 3ஆம் நூற்றாண்டு வாக்கில் வழக்கிழந்தது. இது குஷன், சோக்தானியா மற்றும் பட்டு வீதியில் வழக்கிலும் இருந்தது. சில ஆதாரங்களின் படி, கோட்டான் மற்றும் நியா போற தொலை இடங்களில் கி.பி ஏழாம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கரோஷ்டி யூனிகோடு அட்டவணையில் U+10A00—U+10A5F ஆகிய இடங்களை கொண்டுள்ளது.[1] வடிவம்பிற இந்திய எழுத்துமுறைகளை போல் இடது புறத்தில் இருந்து வலது புறத்துக்கு எழுதப்படாது மாறாக வலது புறத்தில் இருந்து இடது புறத்துக்கு எழுதப்படுகிறது. இதற்கு இது நேரடியாக அரமேய எழுத்துமுறையை சார்ந்த வளர்ந்ததே காரணமாகும். சமீபத்திய கல்வெட்டியல் ஆராய்ச்சிகளின் படி, பேராசிரியர் ரிச்சர்டு சாலமன், சமஸ்கிருத நூல்களின் ஆவணப்படுத்தியது போல, கரோஷ்டி எழுத்துமுறையின் எழுத்துவரிசை:
இதுவே அரபசன அரிச்சுவடி என அழைக்கப்படுகிறது. எழுத்துக்களின் எண்ணிக்கையிலும் வரிசையிலும் சில நூல்களின் வேறுபாடுகள் காணப்படுகின்றன. கரோஷ்டி உயிரெழுத்துக்களை குறிக்க ‘அ'கர எழுத்தில் பல்வேறு உயிர்க்குறிகளை இட்டு வெவ்வேறு உயிரெழுத்துகளாக பயன்படுகிறது. மேலும் சாலமன், கல்வெட்டியல் ஆதாரங்களைக்கொண்டு, உயிரெழுத்துவரிசை மற்ற இந்திய மொழிகளைப் போன்று அகர இகர உகர எகர ஒகர வரிசையில் அல்லாது அகர எகர இகர ஒகர உகர வரிசையை கொண்டிருப்பதாக நிரூபித்துள்ளார். மேலும் கரோஷ்டி எழுத்துமுறை குறில்-நெடில் வேறுபாடுகளை காட்ட முடியாது. இரண்டுக்கும் ஒரே உயிர்க்குறிகளே பயன்படுகின்றன. இந்த அரிச்சுவடி பௌத்தர்களால், பல இயற்கைவெளிப்பாடுகளை மனப்பாடம் செய்துகொள்ள பயன்பட்டது. பிறகு இந்த மந்திரமாக இது ஆவணப்படுத்தப்பட்டுவிட்டது. எண்முறைகரோஷ்டி ரோம எண்முறையை ஒத்த எண்முறையை கொண்டுள்ளது. I -ஒன்று , X - நான்கு மற்றூம் ੭ -பத்து (இரட்டித்தால் இருபது):
வரலாறுகரோஷ்டி எழுத்துமுறை ஜேம்ஸ் பிரின்செப் (1799–1840) என்பவரால், முற்புறத்தில் கிரேக்கத்திலும் பின்புறத்தில் பாளியையும் கொண்டிருந்த இருமொழி இந்தோ கிரேக்க நாணயங்களை கொண்டு தெளிவாக்கம் செய்யப்பட்டது. இதன் விளைவால், இந்திய துணைக்கண்டத்தின், வடமேற்கு பகுதிகளில் அசோகரால் நிறுவப்பட்ட கரோஷ்டி கல்வெட்டுகளை படிக்க நேரிட்டது. ![]() கரோஷ்டி எழுத்துமுறை படிப்படியாக வளர்ந்ததா அல்லது ஒருவரால் ஒரேடியாக இயற்றப்பட்டதா என்பதில் அறிஞர்களிடத்தில் கருத்துவேறுபாடு நிலவுகிறது. இந்த எழுத்துமுறையினை ஆராய்கையில், இது அரமேய அரிச்சுவடியை சார்ந்திருப்பது மிகத்தெளிவாக தெரிகிறது. எனினும் இந்திய மொழிகளின் ஒலியியலை ஆதரிப்பதற்காக பல விரிவான மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு கருத்தின் படி, கி.மு 5ஆம் நூற்றாண்டுகளில் அரமேய படையெடுப்பால், இங்கு வந்திறங்கி, அடுத்த 200+ ஆண்டுகளில் கரோஷ்டியாக உருமாறியிருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும் இதற்கு வலு சேர்க்கும் விதத்தில், இடைப்பட்ட எழுத்துமுறைகள் ஏதும் கிட்டவில்லை. கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கு பிறகு ஒரு சீர்படுத்தப்பட்ட எழுத்துமுறையே பயன்பாட்டில் காணப்படுகிறது. காந்தார பௌத்த நூல்களின் கண்டுபிடிப்பு, மீண்டும் கரோஷ்டி எழுத்துமுறை குறித்த ஆய்வுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. மரப்பட்டைகளில் எழுத்துப்பட்ட பல பௌத்த நூல்கள் ஆப்கானிஸ்தானின் ஹத்தா நகரின் கைபர் கனவாயில் மேற்குபுறத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்லது. இந்த கையெழுத்துப்பிரதிகள் பிரிடிஷ் அருங்காட்சியகத்துக்கு கொடையாக 1994 இல் அளிக்கப்பட்டது. இந்த பிரதிகள் அனைத்து கி.மு முதலாம் நூற்றாண்டை சார்ந்தவை ஆகும். இது இவற்றை இதுவரை புத்த நூற்பிரதிகளாக மிகப்பழமையானதாக ஆக்குகிறது.
இவற்றையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia