கர்க்கடக வாவுகர்க்கடக வாவு (மலையாளம்: കർക്കിടക വാവ്) அல்லது ' கர்க்கடக வாவு பலி ' (அமாவாசை திதி) என்பது, இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டின் மாரிக்காலத்தில் இறந்து போன முன்னோர்களை நினைவு கூறும் விதமாக அவர்களின் வாரிசுகளால் இந்து முறைப்படி செய்யப்படும் இந்து சடங்குகளின் தொகுப்பாகும். கொல்ல ஆண்டின் கர்க்கடக மாதத்தின் அமாவாசை நாளில் (நிலவு இல்லாத நாள்) மக்கள் ஆற்றங்கரைகளிலும் கடற்கரைகளிலும் முன்னோர்களுக்கு படையல் அல்லது பலி வழங்குவதற்காக கூடுவார்கள் . வர்கலாவில் உள்ள பாபநாசம் கடற்கரை அத்தகைய வழிபாடு செய்யும் ஒரு முக்கிய இந்து மத தலங்களில் ஒன்றாகும். அன்றைய தினம் இந்த சம்பிரதாய வழிபாடு செய்தால், தங்கள் குடும்பங்களில் இறந்த முன்னோர்களின் ஆன்மாக்கள் மோட்சம் (முக்தி) அடைகின்றன என்று மக்கள் நம்புகிறார்கள். மலையாள கொல்ல ஆண்டின் கர்க்கடகம் மாதத்தில் தமிழ் மாதமான ஆடி மாதத்தின் அமாவாசை அன்று இந்த சடங்கு செய்யும் நிகழ்வு வருவதால், மலையாள மொழியில் வாவு பலி என்றும் தமிழில் அமாவாசை படையல் எனவும் அழைக்கப்படுகிறது. ஆங்கில ஆண்டு மாதங்களில் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் வரலாம் .[1][2][3] செய்யப்படும் சடங்கு முறைமைகள்இறந்த முன்னோர்களின் ஆன்மாக்கள் எளிதில் சாந்தமடையவும்,மோட்சம் அடையவும் எண்ணி படைக்கப்படும் வாவு பலி அல்லது படையல் அந்த குடும்பத்தின் சார்பாக வயது முதிர்ந்த பெரியவர்கள் அல்லது இந்து சமய பூசாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் நிகழ்த்தப்படுகிறது. தர்ப்பை (ஒரு வகை நீளமான புல்), பவித்திரம் (தர்பா புல்லால் செய்யப்பட்ட மோதிரம்), எள் (எல்லு), செருளா (ஒரு சிறப்பு மூலிகை) சமைத்த சாதம், தண்ணீர் மற்றும் வாழை இலைகள் ஆகியவை இந்த சடங்கிற்கு தேவையான முக்கிய துணைப்பொருட்களாகும். இந்த சடங்குகள் எல்லா இடங்களிலும் ஒன்று போல இருப்பதில்லை. சடங்குகள் மற்றும் அதற்க்கு தேவையான பொருட்கள் ஊருக்கு ஊர் மாறுகின்றன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia