கர்நாடக சட்டப் பேரவை
கர்நாடக சட்டமன்றம் என்பது கர்நாடக மாநிலத்தின் மாநிலச் சட்டப் பேரவை ஆகும். கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஆக்கும் அமைப்பு முறை ஈரவை முறைமை ஆகும். (அதாவது, சட்டமன்றம், சட்ட மேலவை ஆகிய இரண்டும் இருக்கும்.) சட்டமன்றம் பெங்களூரில் உள்ள விதான சௌதாவில் இயங்குகிறது. சட்டமன்றத்தில் 225 உறுப்பினர்கள் இருப்பர். ஒருவர் மட்டும் நியமிக்கப்படுவார். ஏனையோர், ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஒருவர் என்ற முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒரு தொகுதியில் அதிக வாக்குகளைப் பெறுபவர், அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவார்.[1][2][3] 2023-ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது வரை பதின்மூன்று சட்டமன்றங்கள் நடந்துள்ளன. தற்போது, பதினான்காவது சட்டமன்றம் இயங்குகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள்மேலும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia