சிக்கலெண் தலத்தில் i. கிடைமட்ட அச்சில் (மெய் அச்சு) மெய்யெண்களும் கற்பனை எண்கள் குத்து அச்சில் (கற்பனை அச்சு) அமைகின்றன.
கற்பனை அலகு அல்லது அலகு கற்பனை எண் (imaginary unit, unit imaginary number) என்றழைக்கப்படும் ஆனது, மெய்யெண்களை (ℝ) சிக்கலெண்களுக்கு (ℂ) நீட்டிக்கும் ஒரு கணிதக் கருத்துரு ஆகும். இவ்வாறு மெய்யெண்கள் சிக்கலெண்களுக்கு நீட்டிக்கப்படுவதால் ஒவ்வொரு பல்லுறுப்புக்கோவைக்கும்P(x) குறைந்தபட்சம் ஒரு மூலமாவது கிடைக்கிறது.
i இன் முக்கியப் பண்பு:
i2 = −1
வர்க்கத்தை எதிரெண்ணாகக் கொண்ட மெய்யெண்களே இல்லை என்பதால் i ஒரு கற்பனை எண்ணாகக் கொள்ளப்படுகிறது. கற்பனை அலகைக் குறிப்பதற்கு, சில இடங்களில் i என்ற குறியீட்டுக்குப் பதிலாக j அல்லது கிரேக்க எழுத்தான ι பயன்படுத்தப்படுகின்றது.
வரையறை
i இன் அடுக்குகள் மீண்டும் சுழலும் மதிப்புகள்:
... (நீலப் பகுதியையடுத்து, மதிப்புகள் மீள்கின்றன)
i−3 = i
i−2 = −1
i−1 = −i
i0 = 1
i1 = i
i2 = −1
i3 = −i
i4 = 1
i5 = i
i6 = −1
... (நீலப் பகுதியை யடுத்து, மதிப்புகள் மீள்கின்றன)
i இன் வரையறையானது, i இன் வர்க்கம் -1 என்ற பண்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது:
ஆனால் i இன் இந்த வரையறையின் விளைவாக, i, -i என -1 க்கு இரு வர்க்கமூலங்கள் கிடைக்கின்றன.
மெய்யெண்களில் மேற்கொள்ளப்படும் அடிப்படைக் கணிதச் செயல்களை சிக்கலெண்களுக்கும் நீட்டிக்கலாம். எந்தவொரு கணிதச் செயலையும் சிக்கலெண்களில் மேற்கொள்ளும்போது, iஐ மதிப்புத் தெரியாத கணியமாகப் பாவித்து செயல்களைச் செய்த பின்னர், விளைவில் உள்ள i2 இன் மதிப்பை −1 எனப் பதிவிட வேண்டும். மேலும் i இன் அடுக்கு இரண்டைவிட அதிகமாக இருப்பின் அவற்றை −i, 1, i, −1 ஆகியவற்றைக் கொண்டு பதிவிடலாம்:
இதேபோல சுழியற்ற மெய்யெண்களுக்குப் போலவே i க்கும் கீழுள்ளவை உண்மையாகும்:
மின் பொறியியலில் மின்னோட்டத்தின் குறியீடு i(t) அல்லது i எனக் குறிக்கப்படுவதால், குழப்பத்தைத் தவிர்க்கும் விதமாக கற்பனை அலகு j எனக் குறிக்கப்படுகிறது.
பைத்தான் நிரலாக்க மொழியிலும் ஒரு சிக்கலெண்ணின் கற்பனைப் பகுதியைக் குறிப்பதற்கு j பயன்படுத்தப்படுகிறது.
மேட்லேப்i, j இரண்டுமே கற்பனை அலகைக் குறிக்கப் பயன்படுத்துகிறது[3]
சுட்டெண்கள், கீழெழுத்துக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் நோக்கில், சில புத்தகங்களில் கற்பனை அலகைக் குறிக்கக் கிரேக்க எழுத்தான (iota) (ι) பயன்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்புகள்
↑கீழுள்ள சமன்பாட்டைத் தீர்ப்பதன் மூலம் அந்த எண்ணைக் காணமுடியும்:
(x + iy)2 = i
x2 + 2ixy − y2 = i
x2 − y2 + 2ixy = 0 + i
மெய், கற்பனைப் பகுதிகளைச் சமப்படுத்த:
x2 − y2 = 0
2xy = 1
y = 1/2x என முதல் சமன்பாட்டில் பதிலிட:
x2 − 1/4x2 = 0
x2 = 1/4x2
4x4 = 1
x மெய்யெண் என்பதால் இச்சமன்பாட்டிற்கு இரு பெய்யெண் தீர்வுகள் உள்ளன: , .
இவை இரண்டையும் 2xy = 1 சமன்பாட்டில் பதிலிட, y க்கும் அதே மதிப்புகள் கிடைக்கின்றன.
எனவே i இன் வர்க்கமூலங்கள்: