கலக்குந்தன்மை![]() கலக்குந்தன்மை (Miscibility) என்பது அனைத்து விகிதாச்சாரங்களிலும் கலக்க வேண்டிய இயல்புடைய பொருட்கள் இணைந்து (அதாவது, எந்தவொரு செறிவிலும் முழுமையாக கரைக்ககூடிய) ஒரேவிதமான கரைசலாக உருவாக்குகிறது. இந்த சொல் பெரும்பாலும் திரவங்களில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் திடப்பொருட்களும் வாயுக்களும் பொருந்தும். உதாரணமாக, நீர் மற்றும் எத்தனால் இணைந்த கரைசலில் அவை இரண்டும் அனைத்தும் ஒத்த விகிதாச்சாரத்தில் கலக்கப்படுகின்றன. [1] இதற்கு மாறாக, ஒரு குறிப்பிடத்தக்க விகித்தில் பொருட்களின் கலப்பு உருவாகவில்லை என்றால் ஒன்றுடன் ஒன்று கலவாத்தன்மை உடையனவாக கருதப்படுகின்றன. உதாரணமாக, பியூட்டனோன் (Butanone) தண்ணீரில் கணிசமாக கரையக்கூடியது, ஆனால் இந்த இரண்டு கரைப்பான்களும் அனைத்து விகிதாச்சாரங்களிலும் கலக்க வேண்டிய இயல்புடையவை இல்லை, ஏனென்றால் அவைகளின் இயல்பு எல்லா விகிதங்களிலும் கரையக்கூடியவை அல்ல.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia