கலிபோர்னியம்(IV) ஆக்சைடு
கலிபோர்னியம்(IV) ஆக்சைடு (Californium(IV) oxide) CfO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. கலிபோர்னியமும் அயோடினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1] தயாரிப்புஉயர் அழுத்தத்தில் மூலக்கூறு மற்றும் அணு நிலை ஆக்சிசனுடன் கலிபோர்னியத்தை சேர்த்து வினைபுரியச் செய்தால் ஆக்சிசனேற்ற வினை நிகழ்ந்து கலிபோர்னியம்(IV) ஆக்சைடு உருவாகிறது.[2] இயற்பியல் பண்புகள்கலிபோர்னியம்(IV) ஆக்சைடு கரும்பழுப்பு நிற திண்மப் பொருளாகும். இது ஒரு கனசதுர புளோரைட்டு படிக அமைப்பைக் கொண்டுள்ளது. படிகத்தில் உள்ள அலகு செல்களுக்கு இடையில் 531.0 ± 0.2 பைக்கோமீட்டர் தூரம் காணப்படுகிறது. கலிபோர்னியம் டையாக்சைடின் படிகங்கள் பொதுவாக உடல் மைய கனசதுர சமச்சீர் நிலையைக் கொண்டிருக்கும். அவை சுமார் 1400 பாகை செல்சியசு வெப்பநிலை வரை சூடுபடுத்தும் போது ஒற்றைச் சாய்வு படிக வடிவமாக மாறி 1750 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகும்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia