கல்கத்தா உயர் நீதிமன்றம்
![]() கல்கத்தா உயர் நீதிமன்றம் இந்த நீதிமன்றமே இந்தியாவின் மிகப் பழமையான நீதிமன்றமாகும். ஜூலை 2, 1862-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றச் சட்டம், 1861-இன்படி நிர்மாணிக்கப்பட்டது, இதன் நீதிபரிபாலனம் மேற்கு வங்காளம் மற்றும் யூனியன் பிரதேசங்களான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை உள்ளடக்கியது. இதன் பழைய கட்டுமனம் ஒய்பேர்ஸ் தாக்குதலின்போது சிதிலமடைந்து அதன்பின் மீண்டும் கட்டமைக்கப்பட்ட ஒன்றே தற்பொழுது இருப்பது. இந்த நீதிமன்றம் மேற்கு வங்காளத்தின் தலைநகரமான கல்கத்தாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்றது. இந்த நீதிமன்றத்தின் சுற்று அமர்வை அந்தமான் நிக்கோபார்த் தீவுகளின் தலைநகரமான போர்ட் பிளேரில் நடத்துகின்றது. இந்த நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆகும். இதன் தலைநகரப் பெயர் கல்கத்தா என்பது 2001-இல் கொல்கத்தா என்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டிருந்தாலும் பழைய பெயரிலேயே தொடர நீதிமன்றம் விலக்கு பெற்றுள்ளது. இங்கு நீண்ட நாள் தலைமை நீதிபதியாக நீதியரசர் சங்கர் பிரசாத் மித்ரா பதவியில் உள்ளார். |
Portal di Ensiklopedia Dunia