கல்மிக்குகள்

கல்மிக்குகள் (Kalmyks) என்பவர்கள் பெரும்பாலும் உருசியாவில் வாழும் ஒரு மங்கோலிய இனக் குழு ஆவர். இவர்களது முன்னோர்கள் சுங்கரியாவில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் ஆவர். ஐரோப்பிய உருசியாவின் தெற்குப் பகுதியில் 1635 முதல் 1779 வரை கல்மிக்கு கானரசை இவர்கள் அமைத்தனர். இக்காலத்தில் காசுப்பியன் கடலின் மேற்குக் கரையில் கல்மிக்கு புல்வெளியின் கல்மிக்கியாவில் பெரும்பான்மையினராக உள்ளனர்.

ஐரோப்பாவுக்குள் காணப்படும் ஒரே பாரம்பரிய பௌத்த மக்கள் இவர்கள் மட்டுமே ஆவர். குடி பெயர்ந்ததன் காரணமாக ஐக்கிய அமெரிக்கா, பிரான்சு, செருமனி, மற்றும் செக் குடியரசில் சிறிய கல்மிக்கு சமூகங்கள் காணப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya