கல்யாண வீடு என்பது சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 16, 2018 முதல் 13 நவம்பர் 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப கதைக்களத்தை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2]
இந்த தொடரை மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம் புகழ் திருமுருகன் கதை எழுதி, இயக்கி மற்றும் நடித்து வருகின்றார், இவருடன் சேர்ந்து பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர். சுந்தர்ராஜன், புதுமுக நடிகைகள் அஞ்சனா மற்றும் கன்னிகா ரவி முதன்மை காதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடர் 13 நவம்பர் 2020 ஆம் ஆண்டு 684 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
இந்த தொடர் முதல் முதலில் ஏப்ரல் 16, 2018 அன்று இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பானது. கொரோனாவைரசு காரணத்தால் ஏப்ரல் 3, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஜூலை 27, 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு புதிய நேரத்தில் ஒளிபரப்பானது.
ஒளிபரப்பான திகதி
நாட்கள்
நேரம்
அத்தியாயங்கள்
16 ஏப்ரல் 2018 - 3 ஏப்ரல் 2020
திங்கள் - சனி
19:30
1-600
27 ஜூலை 2020 - ஒளிபரப்பில்
திங்கள் - சனி
20:00
601-684
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.