கல்வி நிறுவனக் கட்டிடக்கலை, பள்ளிக் கட்டிடக்கலை அல்லது பள்ளிக் கட்டிட வடிவமைப்பு (Educational architecture) என்பது பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களின் வடிவமைப்பிற்காக கட்டிடக் கலைஞர் மற்றும் பிறரைப் பயிற்சி செய்யும் ஒரு துறையாகும். கட்டிடத்தின் வடிவமைப்பானது, மாணவர்களின் கற்றல் அனுபவத்தைக் கணிசமாக தாக்கத்தினை ஏற்படுத்தும். [1] கூடுதலாக, பள்ளிகள் என்பது போக்குவரத்து, வேலைவாய்ப்பு மற்றும் சமூக நடவடிக்கைகளின் முக்கிய ஆதாரங்களாக இருப்பதால், பள்ளிக் கட்டிடங்கள் பெரும்பாலும் சுற்றுப்புறங்களில் அல்லது சமூகங்களின் ஆதாரமாகச் செயல்படுகின்றன. [2][3] ஒரு பள்ளியின் வீழ்ச்சி உள்ளூர் சமூகங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
கல்வி நிறுவனக் கட்டிடக்கலையானது பெரும்பாலும் வகுப்பறைகள் மற்றும் மையப்படுத்தப்பட்ட கழிவறைகள் மற்றும் பிற நோக்கத்திற்காகக் கட்டமைக்கப்பட்ட அம்சங்கள் போன்ற பள்ளிகளுக்குத் தேவையான தனித்துவமான கட்டடக்கலை தேர்வுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டால், கட்டிடங்களை மீண்டும் உருவாக்குவது கடினம். உதாரணமாக, 2013 சிகாகோவில் 50 பள்ளி கட்டிடங்கள் மூடப்பட்டன. 2023 ஆண்டிலும் புதிய வாடகைதாரர்களை அடையாளம் கண்டு பயன்படுத்துவதில் அரசாங்கத்திற்குச் சிக்கல் உள்ளது. [4]
உலகின் பல்வேறு பகுதிகளும் பல்வேறு நாடுகளும் கல்வி நிறுவனங்களுடன் தொடர்புடைய தத்துவங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்துள்ளன. அரசாங்கங்களின் முதலீட்டுப் போக்குகள் மற்றும் கல்வித் தத்துவத்தில் பெரிய மாற்றங்களால் தாக்கம் ஏற்பட்டுள்ளன.
வாய்ப்பு
ராயல் அரிவியல் கல்லூரி அகாதமி கட்டிடக்கலை (இம்பீரியல் காலேஜ் லண்டன்)
கல்வி கற்பதனையே முதன்மையான நோக்கமாகக் கொண்டிருக்கும் கட்டிடங்கள் குறித்து இது குறிப்பிடுகிறது. உதாரணம்:பள்ளிக்கூடம்.
↑Caldwell, Mark S. (1993). "Educational Architecture: Constructing Courses to Meet Learner's Needs and Expectations". Journal of Professional Legal Education11 (1): 13.