கல வட்டம்![]() ஒரு கலத்தின் கலப்பிரிவின் ஆரம்பத்துக்கும், அடுத்த கலப்பிரிவின் ஆரம்பத்துக்கும் இடையே கலத்தில் நடைபெறும் சகல செயற்பாடுகளும் ஒருமித்து கல வட்டம் (cell cycle, அல்லது cell-division cycle) என அழைக்கப்படும். கலவட்டத்தின் இறுதியில் புதிய கலங்கள் தோற்றுவிக்கப்படும். பாக்டீரியா கலங்களில் இருகூற்றுப் பிளவு இறுதியாக நடைபெற்று இரு புதிய கலங்கள் தோற்றுவிக்கப்படும். யூக்கரியோட்டா (மெய்க்கருவுயிரி) கலங்களில் தாய்க்கலத்தை ஒத்த இரு மகட்கலங்கள் தோற்றுவிக்கப்படும் இழையுருப்பிரிவோ அல்லது புணரி உருவாக்கத்துக்காக நடைபெறும் ஒடுக்கற்பிரிவு நடைபெறலாம். பொதுவாக இழையுருப்பிரிவு இரண்டு மகட் கலங்களையும், ஒடுக்கற்பிரிவு நான்கு மகட் கலங்களையும் தோற்றுவிக்கின்றன. கலப்பிரிவு கல வட்டத்தை எல்லைப்படுத்தும் அவத்தையாக இருந்தாலும், அனேகமான கலங்களில் அது கல வட்டத்தின் குறுகிய நேரத்தையே பிடித்திருக்கும். கல வட்டத்தில் கலப்பிரிவு (இழையுருப்பிரிவு அல்லது ஒடுக்கற்பிரிவு) நடைபெறாத அவத்தை இடையவத்தை என அழைக்கப்படும். இடையவத்தையின் போதே கலம் வளர்ச்சியடைவதுடன் ஊட்டச்சத்துக்களையும் சேமிக்கின்றது. பொதுவாக கலவட்டத்தில் இடையவத்தையே மிக நீண்ட அவத்தையாகும். போதியளவு வளர்ச்சியடைந்த பிற்பாடே கலப்பிரிவு நடைபெறும். பல கல வட்டங்கள் பூர்த்தியாக்கப்படுவதாலேயே கருக்கட்டலின் போது உருவாகும் தனிக்கல நுகம் வளர்ச்சியடைந்து பல்கல முழுவுடலி ஆகின்றது. தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் கலத்திரளில் இடையவத்தை, இழையுருப்பிரிவு அவத்தை ஆகிய இரு அவத்தைகளே உள்ளன. எனினும் வியத்தமடைந்த கலங்கள் G0 எனும் நிலைக்கும் செல்கின்றன. இது இறுதி கல வட்டத்தின் இறுதியில் பெறப்படும் அவத்தையாகும். இந்நிலையை அடைந்த கலங்கள் மீண்டும் கலவட்டத்துக்குள் சென்று புதிய கலங்களைத் தோற்றுவிப்பதில்லை. தூண்டப்படும் போது சில G0 அவத்தைக் கலங்கள் மீண்டும் கலவட்டத்துக்குள் உள்வாங்கப்படலாம். கல வட்ட அவத்தைகள்:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia