களிச்செதில் கல்
![]() களிச்செதில் கல் (Diaspore) /ˈdaɪəspɔːr/, அல்லது டயாசுப்போரைட், எம்போலைட், கய்செரைட் அல்லது டான்ட்டாரைட் எனவெல்லாம அழைக்கப்படும் கனிமம் ஓர் அலுமினியம் ஆக்சைடு ஐதராக்சடு கனிமம் ஆகும். இதன் வேதியியல் வாய்பாடு α-AlO(OH) ஆகும் இது செஞ்சாய்சதுரப் படிகமாக அமைகிறது. இது ஜியோத்தைட் கனிமத்தைப் போல சம உருவாக்கதில் படிகமாகிறது. இயல்புகள்இக்கனிமத்தின் படிகங்கள் அரிதாக, மென்தகடு அல்லது (010) தளத்தில் பலகை அமைப்பிலும், C கனிம நகர் திசைக்கு இணையாக ஊசிவடிவப் படிகமாக நீண்டும், மெல்லிய செதில்களாகவும் காணப்படுகிறது. (010) தளத்தில் தெளிவான பிளவுடனும் (110) தளத்தில் சீரற்ற பிளவினையும் சங்கு முறிவினையும் உடையதாகும். இதன் கடினத்தன்மை மோவின் அளவுகோலில் 6(1/2)- 7 ஆகும். மிக எளிதில் நொறுங்கக்கூடிய இதன் ஒப்படர்த்தி 3.3 முதல் 3.5 வரை அமையும்மிது வெண்மை, சாம்பல் கலந்த வெண்மை, நிறமற்றும், வெளிர்மஞ்சள், வெளிர்சிவப்பு, பச்சை கலந்த பழுப்பு, ஊதா நிறங்களிலும் காணப்படும். இதன் மிளிர்வு, பொலிவான பளிங்கு நிறத்தினையும் பிளவுற்ற தளங்களில் முத்து மிளிர்வினையும் உடையதாய்க் காணப்படும். இது ஒளிப்புகும் தன்மை முதல் ஓரளவிற்கு ஒளிக்கசியும் தன்மை வரையிலானது. ]].[3] இது ஈரச்சினை உடையதாகும். இதன் ஒளிவிலகல் எண் α=1.682-1.706, β=1.705-1.725, γ=1.730-1.752 ஆகும். இதன் ஒப்படர்த்தி அல்லது தன் ஈர்ப்புதிறம் 3.4 ஆகும். இது மூடிய ஊதுகுழலில் வெப்பம் ஊட்டினால் நீரிழந்து கடுமையான வெண்சிதல்களாகப் பிரிந்து தூளாகிறது.[4] இதன் கடினத்தன்மை எண்ணில் இருந்து இதைப் பிற நிறமற்ற ஒளியூடுருவும் செவ்வையான பிளவும் முத்துப் பொலிவும் உள்ள அபிரகம், மாக்கல், புரூசைட், ஜிப்சம் ஆகிய கனிமங்களில் இருந்து தெளிவாகப் பிரித்தறியலாம். டயாசுப்போர், கிப்சைட்டுடன் திண்ணிய மெல்லிய கோளவடிவப் பொருளாகப் போகிமைட்டுடன் பாக்சைட்டில் மிகப் பரவலாகக் கிடைக்கிறது.[2][5] இக்கனிமம் குருந்தம் அல்லது குருந்தைட் எனும் சாணைக்கல் க்னிமம் ஆகிய மாற்று வடிவத்தில் குறுணைகளாக சுண்ணக்கல், பிற படிகப் பாறைகளில் உள்ளது. மேற்காேள்கள்
|
Portal di Ensiklopedia Dunia