கவிஞன் உள்ளம் என்பது துறையூர் சமீன்தார் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த ந. சுப்புரெட்டியார் எழுதிய ஒரு கட்டுரைத் தொகுப்பு நூல். இதன் முதற் பதிப்பு 1949 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 2008-09 காலப் பகுதியில் நாட்டுடைமை ஆக்கப்பட்ட இவ்வாசிரியரின் நூல்களுள் இதுவும் ஒன்று. தமிழ் இலக்கியப் பாடல்களில் வரும் நிகழ்ச்சிகளைச் சிறிய கட்டுரைகளால் இந்நூல் விளக்குகிறது. இவ்வாறான 25 கட்டுரைகள் இந்நூலில் அடங்கி உள்ளன. பொதுவாக இலக்கியத்திலும், சிறப்பாகச் சங்க இலக்கியத்திலும் விருப்பத்தை ஊட்டி, அவ்விலக்கியங்களை மக்கள் படிக்கச் செய்வதே இந்நூல் ஆசிரியரின் நோக்கம்.[2] இந்நூல் எளிய நடையில் அமைந்துள்ளது.
உள்ளடக்கம்
கவிஞன் உள்ளம் (நூல்)- உள்ளடக்கம்
சங்கப் புலவர்கள் முதல், பாரதிதாசன் வரை எழுதிய பாடல்கள் இந்த நூலில் உள்ள கட்டுரைகளுக்குக் கருப்பொருளாக அமைந்துள்ளன.
இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளையும், அவற்றில் எடுத்தாண்டுள்ள தமிழ் இலக்கியப் பாடல்கள், அவை இடம்பெற்ற நூல்கள் என்பவை பற்றிய தகவல்களையும் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.
வ.எண்
தலைப்பு
பக்கஎண்
குறிப்புகள் - விளக்கப்பட்டுள்ள, சங்ககாலப் பாடல்கள்