காகிதப்பூ
காகிதப்பூ என்பது ஒரு வகைப் பூ. இது போகைன்வில்லா எனவும் அழைக்கப்படுகின்றது. இது பூக்கும் தாவரவகைக்குரியது. தென்னமரிக்காவில் பிரேசில் முதல் பெரு வரையான பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. இதில் சுமார் 18 வரையான குலபேதங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது..இது மிகவும் மெல்லியதாக இருப்பதால் தமிழகத்தில் காகிதப்பூ என்றழைக்கப்படுகிறது. இப்பூக்கள் ரோசா நிறம், சிவப்பு, வெள்ளை முதலிய நிறங்களில் காணப்படுகின்றன. இதன் செடியில் முட்கள் இருக்கும். காகிதப்பூவை வீட்டில் அலங்காரச் செடிகளாகவும், வேலிகளாகவும் மக்கள் பயன்படுத்துகின்றனர். கொடிவகை இனங்கள் 1 முதல் 12 மீ (3 முதல் 40 அடி.) வரை வளரக்கூடியது. முட்களின் முனைகள் ஒரு கறுப்பு மெழுகுப் படையால் மூடப்பட்டிருக்கும். உலர் காலத்தில் இலை உதிர்த்தியும் மழைக் காலத்தில் பசுமையுடனும் காணப்படும். இலைகள் 4-13 செ.மீ. நீளமும் 2-6 செ.மீ. அகலமும் கொண்டது. இதன் உண்மையான மலர் சிறிய மற்றும் பொதுவாக வெள்ளை, அல்லது மஞ்சள் நிறத்தி காணப்படும். நிறம் கவர்ச்சியான தோற்றத்தை பூவடி இலைகள் வழங்குகின்றன. மூன்று மலர்கள் கொண்ட கோர்வைக்கு இளஞ்சிவப்பு, கருநீலம், ஊதா, சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, அல்லது மஞ்சள் நிறத்திலான பிரகாசமான பூவடி இலை காணப்படும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia