காக்கிநாடா துறைமுகம்
காக்கிநாடா துறைமுகம் (Kakinada port) என்பது இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள காக்கிநாடாவில் அமைந்துள்ளது. இது விசாகப்பட்டினம் துறைமுகத்திற்குத் தெற்கே 170 கி.மீ தொலைவில் உள்ளது.[1] தகவல்கள்காக்கிநாடா துறைமுகம், பரப்பளவில் ஒரு மிகப்பெரிய நங்கூரத் துறைமுகமமாக விளங்குகிறது. காக்கிநாடா ஆழ்கடல் துறைமுகம், காக்கிநாடா மீன்பிடித் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம் போன்றவற்றையும் இத்துறைமுகம் உள்ளடக்கியுள்ளது.[2] சிறப்புகள்காக்கிநாடா நங்கூரத் துறைமுகம் ஒரு நூற்றாண்டு பழமையான மரபைக் கொண்டது. காக்கிநாடா ஆழ்கடல் துறைமுகம் என்பது ஒரு அனைத்து வகையான தட்பவெப்ப நிலைகளுக்கும் ஏற்ற ஆழ்கடல் துறைமுகம் ஆகும். மேலும், 12 மீட்டர் ஆழமுள்ள கால்வாயைக் கொண்டு உள்ளது. இத்துறைமுகம் 50,000 மெட்ரிக் டன் எடையுள்ள கலன்களை கையாளும் திறன் கொண்டது. 2010-2011 ஆம் ஆண்டில் 10.81 மில்லியன் டன் எடையை கையாண்டு உள்ளது.[1] அரசுதவிசமீபத்தில் ஆந்திர அரசு காக்கிநாடா கடற்கரையை 100 ஏக்கர் அளவிற்கு துறைமுகத்திற்காக விரிவுபடுத்தியுள்ளது.[3] மேற்கோள்கள்
இவற்றையும் காண்க |
Portal di Ensiklopedia Dunia