காசி ஆனந்தன்

காசி ஆனந்தன்
பிறப்பு4 ஆகத்து 1938 (1938-08-04) (அகவை 86)
மட்டக்களப்பு
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்விமெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் (பிறப்பு: 4 ஆகத்து 1938, இயற்பெயர்: காத்தமுத்து சிவானந்தன்) ஈழத்து எழுச்சிக் கவிஞர். இளைஞனாக இருந்த காலத்திலேயே சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராக போராட்டம் செய்தவர்.

இளமைக் காலம்

மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தனிச்சிங்களச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்து சிறை சென்றவர். வாகன இலக்கத்தகடுகளிலேயே சிங்கள எழுத்துக்கள் இருக்கக்கூடாது என்று அவற்றை அகற்றும் போராட்டத்திலும் பாடசாலை பெயர்ப்பலகைகளில் சிங்கள மொழி இருக்கக்கூடாது என்றும் போராட்டம் செய்து காவலர்களால் கைதாகி சிறையில் சித்திரவதை அனுபவித்தவர்.

போராட்டத்தில் இணைவு

பின்னர் தமிழ் நாடு சென்று சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் உயர் கல்வி கற்கும் வேளையில் அங்கு பெரியார் ஈ. வே. ராமசாமியுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் 1963இல் இலங்கை திரும்பி இலங்கை அரச மொழித்திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக சேர்ந்தார். 1972 இல் இலங்கை குடியரசாக மாறியபோது அதன் தமிழ் எதிர்ப்புக் கொள்கையோடு ஒத்து வராததால் அரசுப் பணியிலிருந்து விலகி ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கு துணை நின்றார். இவர் இலங்கையில் ஐந்து சிறைகளில் சுமார் ஐந்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.

தமிழகத்தில்

இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான காலப்பகுதியில் பேச்சுக்களுக்காக விடுதலைப்புலிகள் இந்தியா சென்றபோது காசியும் இந்தியா சென்றார். விடுதலைப்புலிகளின் அரசியல் விவகாரக்குழுவின் மத்திய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அக்காலப்பகுதியில் இந்தியாவில் ராஜீவ் அரசுடனான பேச்சுக்குழுவில் விடுதலைப்புலிகள் தரப்பு சார்பாளர்களில் ஒருவராக காசி சென்றார்.

மாமனிதர் விருது

பின்னர் தமிழகத்திலேயே தங்கிவிட்ட காசி ஆனந்தன் இன்றும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக அங்கு குரல் கொடுத்தவண்ணமுள்ளார். ஈழப்போராட்ட காலத்தின் இக்கட்டான காலப்பகுதிகளில் தோளோடு தோள் நின்ற இவருக்கு தமிழீழத்தின் அதிஉயர் விருதான மாமனிதர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். காசி ஆனந்தன் உயிர் தமிழுக்கு, தமிழன் கனவு, தெருப்புலவர் சுவர்க்கவிகள் உட்பட பல கவிதை நூல்களைத் தந்துள்ளார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்

  • தெருப்புலவர்
  • உயிர் தமிழுக்கு – 1961
  • தமிழன் கனவு – 1970
  • காசி ஆனந்தன் கவிதைகள் - 1981 (பாகம் 1, 2)
  • சுவர்க்கவிகள் - உட்பட பல கவிதைத் தொகுப்புகளைத் தந்துள்ளார்.
  • பிரபாகரன் நெருப்பின் பிறப்பு
  • பெண்பா
  • நறுக்குகள் பாகம்-2


சிறுகதைகள்

  • காசி ஆனந்தன் கதைகள்
  • நறுக்குகள்

எழுதிய பாடல்கள் சில

  1. அடைக்கலம் தந்த வீடுகளே[1][2]
  2. அழகான அந்தப் பனைமரம்
  3. அன்னைத் தமிழீழ மண்ணே உன்னை
  4. ஆயிரம் ஆயிரம் படை வந்தாலும்[1][2]
  5. இந்திய அரசே உன்‌ படையைத்‌ திருப்பு[2]
  6. இன்னும் ஐந்து மணித்துளியில்[3]
  7. உலகத்தமிழரை உயரவைத்தவன் பிரபாகரனே
  8. உலகத்தமிழினமே எண்ணிப்பார்[1][2]
  9. எங்கள் தோழர்களின் புதைகுழியில்[1][2]
  10. எடுகையில் வெடிகுண்டை புலியே நீ வாடா
  11. என்னடா தம்பி கதைக்கிறானுகள் சந்தி வெளியில[4]
  12. ஒரு தலைவன் வரவுக்காய்[4]
  13. ஓ வீரனே எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும்[1][2]
  14. கண்டியிலே கோயில் கொண்ட புத்ததேவா[5][4]
  15. கரும்புலி மாமகள் வருகிறாள்
  16. கலங்கரை விளக்கம் தெரியுது
  17. காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை[4]
  18. குண்டு விழுந்தால் என்ன[2]
  19. கோணமலை எங்கள் கோட்டை[1][2]
  20. சிங்களவன் குண்டுவீச்சிலே
  21. செவலை மாடு கட்டியிருக்கிற சலங்கை உடையட்டும்
  22. செல்லப்பா கொஞ்சம் நில்லப்பா
  23. சொல்லில் அடங்காத கொடுமை[1][2]
  24. தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும்[2]
  25. தமிழ்வீரம் கடற்புலிகள் கையிருப்பாகும்[6]
  26. தமிழா! நீ பேசுவது தமிழா?
  27. தமிழீழம் எங்கள் தாயடா
  28. தமிழீழம்‌ காக்கும்‌ காவலரண்‌[2]
  29. தமிழீழத்தின் அழகு தனியழகு
  30. தலைவரின் ஆணை கிடைத்தது
  31. தாலாட்டுப் பாடமாட்டேன்[1][2]
  32. திலீபன் அழைப்பது சாவையா[1]
  33. தோழர்களே தோழர்களே கொஞ்சம்‌ பாரம்‌ தூக்குங்கள்‌[2]
  34. நஞ்சு கழுத்திலே நெஞ்சு களத்திலே[7]
  35. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்[2][1][8]
  36. நானோர்‌ கனாக்‌ கண்டேன்‌ தோழி[2]
  37. நீங்க வேற நாடையா நாங்க வேறு நாடு
  38. நெஞ்சம் மறக்குமா[1][2]
  39. நெருப்பில் நீராடுவோம் நாங்கள் நிமிர்ந்து போராடுவோம்
  40. நெருப்போடு என்னடா விளையாட்டு
  41. நேருக்கு நேர் வந்து மோது
  42. நானோர்‌ கனாக்‌ கண்டேன்‌ தோழி[2]
  43. பறக்குதடா யாழ் கோட்டையிலே[1][2]
  44. பட்டினி கிடந்து பசியால்‌ மெலிந்து[2]
  45. பாரீசில் வாழும் சூட்டி
  46. பிரபாகரன் எங்கள் வழிகாட்டி
  47. பிரபாகரன் தமிழ் ஈழத்தாய்ப் பிள்ளை
  48. பிரபாகரன் படைவெல்லும்
  49. பிரபாகரன் போடும் கணக்கு[6]
  50. பிரபாகரன்‌ நினைத்தது நடக்கும்‌[2]
  51. பிரபாகரன் வழி நில்லு[5]
  52. பிரபாகரனைப் பின்பற்று
  53. புலிகள் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு படையெடுப்பினம்
  54. பொங்கு தமிழ் பொங்கு தமிழ்[6]
  55. பொறிகக்கும்‌ விழியோடு புறப்பட்டுவிட்டோம்‌[2]
  56. போடா தமிழா போடா[1][2]
  57. போர் இன்னும் ஓயவில்லை[1][2]
  58. மக்களெல்லாம்‌ மக்களெல்லாம்‌ பிரபாகரன்‌ பக்கம்‌[2]
  59. மங்கள நாதஸ்வரம் எம் மண்ணில் ஒலிக்குமா
  60. மண்ணில் புதையும் விதையே[6]
  61. மறவர்‌ படைதான்‌ தமிழ்ப்படை[2][8]
  62. மாங்கிளியும் மரங்கொத்தியும்
  63. மீன்‌மகள்‌ பாடுகிறாள்‌ வாவிமகள்‌ ஆடுகிறாள்‌[2]
  64. வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா
  65. வாருங்கள்‌ புலிகளே தமிழீழம் கண்போம்‌[2]
  66. விடுதலைப் புலித் தங்கச்சி[1][2]
  67. விடுதலைப் புலிப்படை வீசிய ஏவுகணை மோதி
  68. வீசுதடா தம்பி விடுதலைக் காற்று
  69. வீரம் படைக்குது பாரடா கரும்புலிப் படை[9]
  70. வெட்டி வீழ்த்துவோம் பகையே[1][2]
  71. யாரிதைச்‌ சொல்லவில்லை இன்று யாரிதைச்‌ சொல்லவில்லை[2]
  72. செண்பகமே செண்பகமே சிறகை விரித்துவா

மேற்கோள்கள்

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 காசி ஆனந்தன் கவிதைகள். December 1990.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 2.27 2.28 2.29 "தமிழீழ எழுச்சிப் பாடல்கள்" புத்தகத் தொகுப்பு. 1990.
  3. நிதர்சனம் ஒளிவீச்சு கதிர் 89 (மார்ச் 2001).
  4. 4.0 4.1 4.2 4.3 "ஒரு தலைவனின் வரவு எழுச்சிப்பாடல்கள்" புத்தகத் தொகுப்பு.
  5. 5.0 5.1 தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
  6. 6.0 6.1 6.2 6.3 TTN தொலைக்காட்சி.
  7. நிதர்சனம் ஒளிவீச்சு 100வது இதழ்.
  8. 8.0 8.1 ஈழநாதம்-1990.04.22.
  9. நிதர்சனம் ஒளிவீச்சு கதிர் 106 (மே-ஜூன் 2004).

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya