காசுப்பாய்ச்சல் கூற்று
காசுப்பாய்ச்சல் கூற்று (cash flow statement )என்பது ஒர் நிறுவனத்தில் குறித்த காலப்பகுதி ஒன்றில் (காலாண்டிற்கு அல்லது ஒருவருடத்திற்கு) நிகழும் காசும் காசுக்குச் சமமானவைகளினதும் உட்பாய்ச்சல் மற்றும் வெளிப்பாய்ச்சல்களினது நிதி அறிக்கை ஆகும்.இக் காசுப்பாய்ச்சல் கூற்றிலிருந்து நிறுவனமொன்றின் நிதிவளங்கள்,கடன் தீர் இயலளவு போன்ற தகவல்களை அறிந்து கொள்ளமுடியும். கணக்கியலில் காசு எனும் பதமானது பணத்தினைதவிர குறுங்காலத்தில் இழப்பின்றி காசாக மாற்றக்கூடிய முன்னுரிமை பங்குகள்(Preference shere),தொகுதிகடன்(Debenture),திறைசேரி உண்டியல்(Treasury Bill),அழைப்பு வைப்பு(Call deposit) என்பனவற்றையும் குறிக்கும். நிறுவனமொன்றில் இடம்பெறும் காசுப்பாய்ச்சல்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகளின்படி (இலங்கை கணக்கீட்டு நியமம் 09) 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
பொதுக்கம்பனிகள் நிதியறிக்கை வெளியிடும் போது காசுப்பாய்ச்சல் கூற்றினையும் வெளியிடவேண்டும் என இலங்கையில் கம்பனிச்சட்டம் கூறுகின்றது. காசுப்பாய்ச்சல் கூற்றின் பொதுவான வடிவம்12/31/2005 இருந்து 12/31/2006 வரை காசுப்பாய்ச்சல் கூற்று செயற்பாட்டு நடவடிக்கையால் தேறிய காசுப்பாய்ச்சல் +/- x x முதலீட்டு நடவடிக்கையால் தேறிய காசுப்பாய்ச்சல் +/- y y நிதியிடல் நடவடிக்கையால் தேறிய காசுப்பாய்ச்சல் +/- z z மொத்த காசுப்பாய்ச்சல்கள் = காசுப்பாய்ச்சல்களின் மாற்றம் + ஆரம்ப காசின் மொத்தம் + ஆரம்ப காசு = இறுதி காசின் கூட்டுத்தொகை = இறுதிக்காசு செயற்பாட்டு நடவடிக்கைசெயற்பாட்டு நடவடிக்கைகள் நிறுவனதில் இடம்பெறும் வியாபார நடவடிக்கைகளினையும் இதன்போது ஏற்படும் காசுப்பாய்ச்சல்களை உள்ளடக்கும்.எடுத்துக்காட்டாக, விற்பனை,பொருட்கொள்வனவு போன்றவையாகும். இவைதவிர:
முதலீட்டு நடவடிக்கைமூதலீட்டு நடவடிக்கைகள் நிறுவனத்தில் இடம்பெறும் நீண்டகாலச் சொத்துக்களின் கொள்வனவினையும் அதன் விற்பனையின்போதும் நிகழும் காசுப்பாய்ச்சலினை உள்ளடக்கும். நிதியிடல் நடவடிக்கைநிதியிடல் நடவடிக்கைகள் நிறுவனத்தில் முதலீட்டாளர்,பங்குதாரர்,வங்கிளிடமிருந்து நிதி பெறப்படுதல்,மீள செலுத்தப்படுதல் போன்றவற்றால் ஏற்படும் காசுப்பாய்வினையும் உள்ளடக்கும்.
தயாரிப்பு முறைகள்நேர் முறை
The cash flow for this example is +$40.00. நேரில் முறை
இவற்றையும் பார்க்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia