காசுமீர் பிரச்சினைகாசுமீர் பிரச்சினை என்பது காசுமீர் மாநிலம் மீது இந்தியாவிற்கும், இந்தியாவின் அண்டை நாடான பாகித்தானிற்கும் இடையே நிலவி வரும் நில உரிமை தொடர்பான பிரச்சினைகளைக் குறிக்கிறது. இந்தியா, பாகித்தான் நாடுகள் ஆங்கில அரசிடமிருந்து சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை இது தீர்க்கப்படாத பிரச்சினைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும், அதனைத் தொடர்ந்து போர் அல்லது இராணுவ நடவடிக்கை நடைபெறுவதும் அவ்வப்போது இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதும், பன்னாட்டு அமைப்புகள் தலையிட்டு இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க முயற்சிகள் செய்வது என்று இருந்தாலும் காசுமீர் சர்ச்சை இன்று வரை தொடர்கிறது.[1] ஆக்கிரமிப்புகள்ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மேற்குப் பகுதிகளையும், வடக்குப் பகுதிகளையும் சூலை 1947-இல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்ததது. இப்பகுதிகளை ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு நிலங்கள் என்ற பெயரில் பாகித்தான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. மற்றொரு அண்டை நாடான சீனா ஜம்மு கஷ்மீரின் கிழக்குப் பகுதியில் உள்ள அக்சய் சின் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பின்னர் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னர் ஹரி சிங், ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைய ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம் செய்து கொண்டார். வரலாறுகாஷ்மீர் மாநிலத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பாக 1947, 1965 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இரண்டு நாடுகளுக்கு இடையே மூன்று முறை போர்கள் நிகழ்ந்துள்ளன. இந்த போர்கள் தவிர்த்து அவ்வப்போது ராணுவ மோதல்களும் நிகழ்ந்துள்ளன. இரு நாடுகளின் சார்பாகவும் பல ஆண்டுகளாக எல்லைப்புறத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. முக்கிய நிகழ்வுகள்இந்தியா பாகித்தான் இரு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகள் பல நடைபெற்றுள்ளன. இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், வெளியுறவுத் துறை செயலாளர்கள், பிரதமர், அதிபர் போன்ற இருநாடுகளின் தலைவர்கள் என பல்வேறு மட்டங்களிளும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. இவ்வாறான பேச்சுகளின் முடிவில் சில முடிவுகள் எட்டப்பட்டாலும் கூட பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்படவில்லை. இதுவரை நடைபெற்ற முக்கிய சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகள்:
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia