காஞ்சியம் பெருந்துறை

சேரநாட்டில் பாய்ந்த பெரிய ஆறு பேரியாறு. அது கடலோடு கலக்குமிடத்தில் சேரநாட்டின் தலைநகர் வஞ்சி இருந்தது. வஞ்சி மரங்கள் மிகுதியாக இருந்த ஊர் வஞ்சி. இந்த வஞ்சிமாநகரின் எதிர்க் கரையில் காஞ்சியம் பெருந்துறை இருந்தது. இதில் காஞ்சி மரங்கள் மிகுதியாக இருந்தன. இந்தக் காஞ்சியம் பெருந்துறையில்தான் செங்குட்டுவன் வேனில்விழாக் கொண்டாடினான்.
(பதிற்றுப்பத்து 48)

மருத மரம்

மருத மரம் மிகுதியாக இருந்த ஊர் மருதத்துறை. மருதத்துறை என்பது மருவி மருதை என்று ஆகிப் பின்னர் மதுரை ஆயிற்று. (மரிபாடல்)

தில்லை மரம்

தில்லை மரம் மிகுதியாக இருந்த ஊர் தில்லை. (=சிதம்பரம்)

காஞ்சி மரம்

காஞ்சி மரம் மிகுதியாக இருந்த ஊர் காஞ்சிபுரம்.

நெய்தல் கொடி

நெய்தல் கொடி மிகுதியாகப் படர்ந்திருந்த ஊர் நெய்தல் அம் கானல் (நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி)

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya