காடப்புறா கலைக்குழு
காடப்புறா கலைக்குழு (Kadapuraa Kalaikuzhu) 2023 ஆம் ஆண்டு ராஜா குருசாமியின் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் முனீஷ்காந்த் ராமதாஸ், காளி வெங்கட், மைம் கோபி, ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை சக்தி சினி புரொடக்சன்ஸ் என்ற பதாகைப் பெயரில் முருகானந்தம் வீரராகவன் மற்றும் சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரித்தனர். திரைப்படம் 2023 சூலை 7 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. நடிகர்கள்
தயாரிப்புதிரைப்படத்தின் ஒளிப்பதிவை வினோத் காந்தியும் படத்தொகுப்பை இராம் கோபியும் மேற்கொண்டனர்.[1] திரைப்படத்தின் முன்னோட்டம் 2023 சூன் 19 அன்று வெளியிடப்பட்டது.[2] பாடல்கள்இப்படத்திற்கு கென்றி இசையமைத்திருந்தார்.
வரவேற்புமாலை மலரின் ஒரு விமர்சகர், "காடப்புறா கலைக்குழுவை இரசிக்க முடியும்". என்று கூறினார்[3]. தினத்தந்தியின் ஒரு விமர்சகர் "மேற்கத்திய இசையின் வருகையால் நாட்டுப்புறக் கலைகள் அழிந்து, அதை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் கவலைக்கிடமாகிவிட்டதைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுக் கதையை இயக்குநர் இராஜா குருசாமி சொல்ல முயன்றிருக்கிறார்." என்று கூறினார்[4]. இந்து தமிழ் திசையின் ஒரு விமர்சகர் ஐந்து மதிப்பீட்டிற்கு 2/5 மதிப்பிட்டு, "இந்தக் கலைஞர்களின் குழு கிராமியக் கலைகளின் நிலையைப் பேசுவதால் ஈர்க்கிறது" என்று எழுதினார்[5]. தினமலர் விமர்சகர் ஒருவர் ஐந்து மதிப்பீடுகளுக்கு 2/5 மதிப்பீடுகளைக் கொடுத்து கலவையான விமர்சனங்களை அளித்தார்[6]. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia