காட்சிக்குட்பட்ட பேரண்டம்
அண்டவியல் பெருவெடிப்பு கோட்பாட்டில், காட்சிக்குட்பட்ட பேரண்டம் (Observable universe) என்பது மனிதர்கள் பூமியில் இருந்து இன்று காணக்கூடிய விண்மீன் பேரடைகளையும், அவை சார்ந்த பருப்பொருட்களையும் குறிக்கும். அண்டத்தின் தொடக்கத்தில் இருந்து இப்பொழுது வரை ஒளி எவ்வளவு தொலைவு வந்திருக்க முடியுமோ அவ்வளவு நீளத்திற்கு நம்மைச் சுற்றியுள்ளவற்றை நம்மால் காண முடியும். இதுவே காட்சிக்குட்பட்ட அண்டமாகும். பொதுவாக பேரண்டம் பின் வரும் 4 பகுதிகளையும் அவை சார்ந்த பொருட்களையும் அடக்கியது: காட்சிக்குட்பட்ட பேரண்டம், கரும்பொருட்கள், கரும்சக்திகள், ஒளி எல்லையைத் தாண்டியுள்ள பகுதி. கரும் பொருட்களும் ஆற்றலும்![]() அண்டத்திலுள்ள கண்ணுக்குத் தெரியாத எல்லாப் பொருட்களும், கரும்பொருட்கள் (dark matter) என்று சொல்லப்படுகின்றன. இதை வானியலார் அண்டக்கோந்து எனவும், வேகமாகச் சுழலும் விண்மீன்களையும், வேகமாக விரிந்து கொண்டிருக்கும் அண்டத்தையும் கட்டுப்படுத்துகிறது எனவும் நம்புகிறார்கள்.[7] அண்டத்தில் கரும்பொருட்கள் மற்றும் கரும் சக்திகள் 90% இருப்பதாக நம்பப்படுகிறது.[8][9] ஒளி எல்லையைத் தாண்டியுள்ள பகுதிபொதுவாக மானிடர் கண்களை கொண்டு ஒரு பொருளைப் பார்க்க வேண்டும் என்றால் அப்பொருளின் மீது ஒளி பட்டு அவ்வொளி மீண்டும் அம்மானிடர் கண்களை வந்தடைய வேண்டும். அதைப் போல் இவ்வண்டத்தில் மானிடர் கண்களுக்கும், மானிடர் அனுப்பிய செயற்கை விண்ணுளவி தொலைநோக்கிகளுக்கும் ஒளி வந்தடையாத பகுதிகள் ஒளி எல்லையைத் தாண்டியுள்ள பகுதி எனப்படும். எடுத்துக்காட்டாக, அண்டத்தின் எல்லையை பால் வழி மையத்திலிருந்து 1,00,008 கோடி ஒளியாண்டுகள் என வைத்துக்கொண்டால், அதில் பால் வழி மையத்திலிருந்து 4,650 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருந்து மட்டுமே ஒளி மானிடரை வந்தடைந்திருக்கிறது. மீதமுள்ள முழு பகுதிகளையும் காண மானிடர்களுக்கு மேலும் 95,358 ஆண்டுகள் (1,00,008-4,650) ஆகும். அவ்வாறு மானிடர் கண்களுக்கு ஒளி வந்தடையாத பகுதிகள் ஒளி எல்லையை தாண்டியுள்ள பகுதி எனப்படும். ஒளி வந்தடைந்த பகுதிகள் காட்சிக்குட்பட்ட பேரண்டம் எனப்படும். ![]() காட்சிக்குட்பட்ட பேரண்டம்இக்காட்சிக்குட்பட்ட பேரண்டம் பால் வழி மையத்திலிருந்து எந்த கோணத்தில் பார்த்தாலும் குறைந்தது 1,400 கோடி புடைநொடி தூரத்தினைக் கொண்டிருக்கும். அதாவது 2,800 கோடி புடைநொடிகள் விட்டம் கொண்டது. இதன் கொள்ளளவு 3.5 × 1080 கனசதுர மீட்டர்கள் (4.1 × 1032 கனசதுர ஒளியாண்டுகள்) ஆகும்.
ஒரு சராசரி விண்மீனின் எடை 2×1030 கிலோகிராம் ஆகும். ஒரு விண்மீனின் பேரடையில் 40,000 கோடி (4×1011) விண்மீன்கள் இருக்கும். காட்சிக்குட்பட்ட பேரண்டத்தில் 8,000 கோடி(8×1010) விண்மீன் பேரடைகள் இருக்கலாம். அதாவது இக்காட்சிக்குட்பட்ட பேரண்டத்தின் மொத்த எடை 2×1030×4×1011×8×1010= 64×1051 கிலோகிராம்கள் ஆகும். அதாவது 3×1079 நீரியம் அணுக்கள் ஆகும்.[10] மேற்கோள்
இடமிருந்து வலமாக புவி, சூரிய மண்டலம், சூரிய மண்டல துணைக்குழு, பால் வழி, உட் குழு, கன்னி விண்மீன் மீகொத்து, திமிங்கல-மீனம் மீகொத்து தொகுப்பு, காட்சிக்குட்பட்ட பேரண்டம்.(பெரிய படிமத்துக்கு இங்கே சொடுக்குங்கள்.)
|
Portal di Ensiklopedia Dunia