காட்டபிரபா நதி
காட்டபிரபா நதி (Ghataprabha river) இந்தியாவிலுள்ள மகாராட்டிரா, கர்நாடகம், மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வழியாக பாய்கின்ற கிருட்டிணா நதியின் வலது கரையிலுள்ள ஒரு முக்கியமான துணை நதியாகும். சிக்சங்கத்தில் இந்நதி கிருட்டிணா நதியுடன் சங்கமிப்பதற்கு முன்பு 283 கிலோமீட்டர் தொலைவிற்கு கிழக்கு நோக்கி பாய்கிறது. நதி படுகை 8,829 சதுர கிலோமீட்டர் அகலம் அளவிற்கு மகாராட்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பரவியுள்ளது. பாலம்கோகாக் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு தொங்கு பாலத்தை இந்த ஆறு கடக்கிறது. இந்த பாலம் 1800 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 1900 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலும் கட்டப்பட்டதாகும்.[1] மார்கண்டேய ஆறுமார்கண்டேயா நதி காட்டபிரபா நதியின் துணை நதியாகும். கோகாக்கில் காட்டபிரபா நதியில் அதன் சங்கமத்தை அடைவதற்கு முன்பு இந்த நதி கோட்சினமலகி நீர்வீழ்ச்சியாக குதிக்கிறது.[2][3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia