காட்டுப்புத்தூர் ஜமீந்தார் மேல்நிலைப் பள்ளி
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டத்தில், காட்டுப்புத்தூரில் ஜமிந்தார் மேல் நிலைப்பள்ளி அமைந்துள்ளது. சிதம்பர ரெட்டியார் என்பவரால் 1903ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி தமிழ்நாடு அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாகும். இப்பள்ளி 2003ம் ஆண்டு நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியது. சிதம்பர ரெட்டியார்ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நாடு இருந்த போது காட்டுப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார ஜமீனாக இருந்தவர் சிதம்பர ரெட்டியார். இவர் சீலைப்பிள்ளையார் புதூர் எனும் காட்டுப்புத்தூருக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் இப்பள்ளியை துவங்கினார். சில காலம் கழித்து ஜமின்தாரின் வீட்டிற்கு அருகே இருக்கும் இடத்தில் இப்பள்ளி இயங்க துவங்கியது. ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை இருபாலரும் படிக்கும் பள்ளியாக நூற்றாண்டினை கடந்து இயங்கிவருகிறது. ஜூனியர் ரெட் கிராஸ், என்.எஸ்.எஸ் போன்ற சேவை அமைப்புகளும் இப்பள்ளியில் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் சாலை சீரமைப்பு, ஆலய உழவாரப்பணி, எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு முகாம், மரக்கன்று நடுதல், சிறுசேமிப்பு, மகளிர் எழுத்தறிவு திட்டம் போன்ற பணிகளை மாணவர்கள் அவ்வப்போது ஈடுபடுவார்கள். [2] சுத்தானந்த பாரதியார்கவியோகி' சுத்தானந்த பாரதியார் ஆங்கிலம், புவியியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியராக இப்பள்ளியில் பணிபுரிந்துள்ளார். [3] வ.வெ.சு.ஐயரின் கட்டளைக்கிணங்க இரு ஆண்டுகள் இப்பள்ளியில் பணியாற்றியுள்ளார். [4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia