காட்டூர் திருவாலீஸ்வரர் கோயில்
காட்டூர் திருவாலீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், காட்டூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.[1] இக்கோயில் சென்னையிலிருந்து 33 கி.மீ தொலைவிலும், மீஞ்சூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[2] வரலாறுஇக்கோயில் சோழர் காலத்தைச் சேர்ந்தது.[2] கோயில் அமைப்புஇக்கோயில் அழகிய இராச கோபுரத்துடன் அமைந்துள்ளது. இராச கோபுரம் ஐந்து நிலைகளுடன், கிழக்கு நோக்கி உள்ளது. இக்கோயிலில் திருவாலீசுவரர், திரிபுரசுந்தரி சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. கோயில் கருவறை கஜபிருஷ்ட (தூங்கானை மாடம்) விமானத்துடன் உள்ளது.[3] கருவறையில் ஈசன் சதுரபீட ஆவுடையாருடன் சிவலிங்க பாண அமைப்புடன் உள்ளார். கருவறைக்கு நேர் எதிரே வாலியின் சிலை பிரதிட்டை செய்யபட்டுள்ளது. இச்சிலை 2011 இல் நிறுவப்பட்டதாக தெரிகிறது. விநாயகர், முருகர், நடராசர், நவக்கிரகங்கள், கோட்டமூர்த்திகள் ஆகியோரின் திருமுன்கள் இக்கோயிலில் அமைந்துள்ளன. பொதுவாக எல்லா கோயில்களிலும் நவக்கிரக சிற்றாலயமானது கோயிலின் வழகிழக்கு திசையில்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கோயிலில் தென்கிழக்கு மூலையில் நவக்கிரக சிற்றாலயம் அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பாகும். இக்கோயிலின் அம்மனான திரிபுரசுந்தரியின் திருமுன் தெற்கு பார்த்த நிலையில் உள்ளது. கருவறையில் அம்மன் நான்கு கரங்களுடன் உள்ளார். கையில் பாசாங்குசம் ஏந்தி அபய, வரத முத்திரைகளுடன் காட்சியளிக்கிறார்.[2] கோயிலின் தலமரமாக மகிழமரம் உள்ளது. இக்கோயிலில் பல இதழ்களைக் கொண்ட மகாவில்வ மரம் உள்ளது ஒரு தனிச் சிறப்பாகும். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிருவகிக்கப்படுகிறது.[4] பூசைகள்இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia