காட்மியம் சிடீயரேட்டு
காட்மியம் சிடீயரேட்டு (Cadmium stearate) என்பது C36H70CdO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதை காட்மியம் டைசிடீயரேட்டு என்றும் அழைக்கலாம்[2]. அமெரிக்காவின் அவசரகாலத் திட்டமிடல் பிரிவு 302 இன் படியும் சமூக தகவல் அறியும் சட்டம் (42 யூ.எசு.சி.11002) பிரிவும் காட்மியம் சிடீயரேட்டு மிகவும் ஆபத்தான ஒரு பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காட்மியம் சிடீயரேட்டை உற்பத்தி செய்வது, சேமிப்பது அல்லது குறிப்பிடத்தக்க அளவுக்கு பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன [3]. நெகிழிகளுக்கான உயவுப்பொருள் மற்றும் வெப்ப நிலைநிறுத்தியாகப் பயன்படுத்துவதும் இதனுடைய முதன்மைப் பயன்களாகும். காட்மியம் குளோரைடுடன் சோடியம் சிடீயரேட்டை வினைபுரியச் செய்வதால் காட்மியம் சிடீயரேட்டு உருவாகிறது. முன்பாதுகாப்புகால்சியம் சிடீயரேட்டு ஒரு புற்று நோய் ஊக்கியாகும் [4]. . மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia