காட் பாதர் (2020 திரைப்படம்)
காட் ஃபாதர் (God Father) என்பது ஜெகன் ராஜ்ஷேகர் என்பவர் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் அதிரடி பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இதை ராஜ்குமார், அஜித் வாசுதேவ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருந்தன்ர். நட்டி, லால், அனன்யா ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு நவீன் ரவீந்திரன் என்பவர் இசையமைத்துள்ளார். நடிகர்கள்
தயாரிப்புஇந்த படத்தின் மூலம் ஒரு இடைவெளிக்குப் பிறகு நடிகை அனன்யா தமிழ் சினிமாவுக்கு திரும்பினார். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை 2020 ஜனவரி 6 ஆம் தேதி நடிகர் சந்தானமும் கார்த்திக் சுப்புராஜும் வெளியிட்டனர்.[1] வெளியீடுபடம் 21 பிப்ரவரி 2020 அன்று வெளியிடப்பட்டது. விமர்சன பதில்டெக்கான் குரோனிகல், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு பத்திரிக்கைகளும் ஐந்து நட்சத்திரங்களில் இரண்டரையை கொடுத்தன. நடிகர்களின் நடிப்பைப் பாராட்டிய டெக்கான் குரோனிகல், திரைக்கதையை விமர்சித்தது.[2] இதேபோல், டைம்ஸ் ஆப் இந்தியாவும் கணிக்கக்கூடிய திரைக்கதையாக இருந்ததென விமர்சித்தது.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia