காதம்பரிகாதம்பரி என்னும் தமிழ் இலக்கியம் 15ஆம் நூற்றாண்டில் தோன்றியது. ஹர்ஷர்அர்சவர்த்தனர் (ஹர்சவர்த்தனர்) அவைக்களப் புலவர் பாணபட்டர் இதனை வடமொழியில், உரைநடையில் எழுதினார். அது 12000 கிரந்தங்களைக் (எழுத்துக்களைக்) கொண்டது. பூர்வ பாகம், உத்தர பாகம் என இரு பகுதிகளைக் கொண்டது. ஹர்ஷர் 606-647-ஆம் ஆண்டுகளில் ஹரியானா மாநித்திலுள்ள தானேஸ்வரத்தைத் தலைநகராகக் கொண்டு சற்றேறக்குறைய இன்றுள்ள வட இந்தியா முழுவதையும் ஆண்ட பேரரசர். நாகானந்தா, ரத்னாவளி, பிரியதர்சினி என்னும் நூல்களை வடமொழியில் இயற்றியவர். ஹர்ஷ-சரிதம் என்னும் பெயரில் தன்-வரலாற்றையும் எழுதிவர். கந்தருவப்பெண் காதம்பரிஉஜ்ஜயினி நகரத்து அரசன் சந்திரபீடன். இவன் கந்தருவப் பெண் காதம்பரியைக் காதல் திருமணம் செய்துகொள்கிறான். இந்த வரலாற்றைக் கூறும் நூல் காதம்பரி. காதம்பரி நூலின் சுவை அறிந்தவர்களுக்கு உணவுகூடச் சுவைப்பதிலை என்னும் பொருள்படும் வடமொழிப் பழமொழி ஒன்று உண்டு. [1] ஆதிவராக கவிதமிழ்க் காப்பியமான காதம்பரி இரண்டு பகுதிகளாக உள்ளது. முதல் பகுதிக்குப் ‘பூர்வ காதம்பரி’ என்பது பெயர். இதனைப் ‘பட்டபாண கவி’ என்பவர் இயற்றினார். இவரை ‘ஆதிவராக கவி’ என நூலின் பாயிரப்பகுதியிலுள்ள பாடல் குறிப்பிடுகிறது. இரண்டாம் பாகத்தின் பெயர் ‘உத்தர காதம்பரி’. இதனை அவரது மகன் இயற்றினார். ஆதிவராக கவியின் தந்தை அருளாளர் என்னும் அந்தணர். பொருளாகரன் என்பவரின் தம்பி. இவர்கள் சோழநாட்டில் வாழ்ந்தவர்கள். நூல் செய்த காலம் கி.பி. 1411 [2] திருமால், சிவன், கலைமகள், வேழமுகவன், முருகன் ஆகிய வழிபாட்டுப் பாடல்களுக்குப் பின் நூல் விரிகிறது. இவர் காதம்பரி வரலாற்றைச் சுருக்கமாகத் தந்துள்ளதை அவரே குறிப்பிடுகிறார்.
தமிழ்க்காப்பியம்தமிழ்க்காப்பியம் காதம்பரி பாயிரப்பாடல் 14, நூல்பாடல் 1218, ஆகமொத்தம் 1232 பாடல்களைக் கொண்டது. [3] அடிக்குறிப்பு
கருவிநூல்
|
Portal di Ensiklopedia Dunia