காத்தரைன் செசார்சுகி
காதெரைன் ழீன்னி செசார்சுகி (Catherine Jeanne Cesarsky) (பிறப்பு: 24 பிபரவரி 1943)ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் புத்தியல்கால வானியற்பியல் மையப் புலங்களில் செய்த சிறந்த ஆராய்ச்சிக்காகப் பெயர்பெற்றவர். இவர் முன்பு பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் தலைவராகவும் (2006-2009)[2] ஐரோப்பியத் தெற்கு வான்காணகத்தின் இயக்குநராகவும் (1999-2007) இருந்துள்ளார். இவர் 2017 இல் சதுரக் கிலோமீட்டர் அணி கதிர்வீச்சுத் தொலைநோக்கித் திட்டக் குழுமத்தின் தலைவராகவும் உள்ளார். கல்விபிரான்சில் பிறந்த இவர் அர்ஜெண்டீனாவில் வளர்ந்தார். இவர்புவெனாசு ஏரேசு பல்கலைக்கழகத்தில் இயற்பியல்சார் அறிவியல் புலங்களில் இளவல் பட்டம் பெற்றார். இவர் 1971 இல் வானியலில் முனைவர் பட்டத்தை ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார்(கேம்பிரிட்ஜ், மசாசூசட், அமெரிக்கா). பின்னர் பல ஆண்டுகளாக கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் பணிபுரிந்தார். வாழ்க்கைப்பணிஆராய்ச்சிதகைமைகளும் விருதுகளும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia