காத்தலோனியா
காத்தலோனியா (Catalonia, காட்டலான்: Catalunya; ஆக்சிதம்: Catalonha; எசுப்பானியம்: Cataluña) என்பது எசுப்பானியாவின் ஒரு தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் பார்செலோனா ஆகும். இதன் பரப்பளவு 32,114 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 7,504,881 ஆகும். இது எசுப்பானியா நாட்டின் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. காத்தலோனியா மாகாணத்திற்கு, தனி அரசியலமைப்பு சபை, தனி நாடாளுமன்றம், தனி தேசிய கீதம்,[1] தனி கொடி மற்று முத்திரைகள் கொண்டது.[2][3]. காத்தலோனியா எசுப்பானியாவின் நான்கு மாகாணங்களை அடக்கி உள்ளது: பார்செலோனா, கிரோனா, இலைய்டால், தரகோனா. The capital and largest city is பார்செலோனா இதன் தலைநகரமாகவும் மிகப் பெரிய நகரமாகவும் விளங்குகின்றது; எசுப்பானியாவின் இரண்டாவது பெரிய நகரமாகவும் ஐரோப்பாவின் பெரும் பெருநகரப் பகுதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 2017 அக்டோபர் 27 இல் காத்தலோனியா தன்னைத் தனிநாடாக அறிவித்தது.[4] முந்தைய காத்தலோனியா மன்னராட்சியின் பெரும்பகுதி தற்போதைய காத்தலோனியாவில் அடங்கியுள்ளது; மற்ற பகுதி பிரான்சின் பிரன்னீசு-ஓரியன்டேல் மாகாணத்தின் பகுதியாக உள்ளது. இதன் எல்லையாக வடக்கில் பிரான்சும் அந்தோராவும் உள்ளன; கிழக்கில் நடுநிலக் கடல் உள்ளது; எசுப்பானியாவின் பிற தன்னாட்சிப் பகுதிகளான அரகொன் மேற்கிலும் வளன்சியான் மாநிலம் தெற்கிலும் உள்ளன. இப்பகுதியில் காத்தலான், எசுப்பானியம் மற்றும் ஆக்சிதத்தின் அரணிய மொழியும் அலுவல்முறை மொழிகளாக விளங்குகின்றன.[5] பார்சிலோனா கால்பந்துக் கழகம் உலக அளவில் முதல் இடத்தை வகிக்கிறது.[6] காத்தலோனியா தன்னாட்சி பகுதி, எசுப்பானியாவிலிருந்து பிரிந்து சுதந்திரமான நாடாக அமைவதற்கு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 80% மக்கள் காத்தலோனியா தனி நாடாக பிரிவதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.[7] வரலாறு10ஆவது நூற்றாண்டில் கிழக்கு மாவட்டங்களான செப்டிமேனியாவும் மார்சா இசுப்பானிசாவும் பிரான்சியாவிடமிருந்து விடுதலை பெற்றன. இவை பார்செலோனா மாவட்டத்துடன் இணைந்தன. 1137இல் பார்செலோனாவும் அரகொனும் இணைந்த அரகொன் மன்னராட்சி நிறுவப்பட்டது. இக்காலத்தில் காத்தலோனியா கடற்வணிக செல்வாக்குள்ள பகுதியாக மாறியது; அரகொன் கடற்படையின் முதன்மைத் தளமாகவும் நிலநடுக்கடலில் ஆட்சிப்பரப்பை விரிவுபடுத்த உதவியாகவும் இருந்தது. காத்தலோன் இலக்கியம் வளர்ந்தோங்கியது. 1469க்கும் 1516க்கும் இடையே அரகொன் மன்னரும் காஸ்தியோ அரசியும் திருமணம் புரிந்த போதிலும் இணையாக தங்கள் பகுதிகளை ஆண்டு வந்தனர். காத்தலோன் அறமன்றங்கள், நாடாளுமன்றம், மற்ற அமைப்புகள் தங்கள் தனி அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தன. 1640-52 காலப்பகுதியில் காத்தலோனியா காஸ்தியோ படைகளுக்கு எதிராக தங்கள் பகுதியில் புரட்சி செய்தனர்; பிரான்சியப் பாதுகாப்பில் காத்தலோனியக் குடியரசு அமைக்கப்பட்டது. 1659இல் பிரெனீசு உடன்பாட்டின்படி காஸ்தியோ காத்தலோனியாவின் வடபகுதியை பிரான்சிற்கு கொடுக்க இணங்கியது. 1701 - 14 காலகட்டத்தில் எசுப்பானிய சந்ததிப் போரில் அரகொன் மன்னர் எசுப்பானியாவின் மன்னர் பிலிப்பிற்கு எதிரணியில் இணைந்தார். இப்போரில் பிலிப் வென்றதால் எசுப்பானியா முழுமையும் காஸ்தியோ அல்லாத அமைப்புகள் அழிக்கப்பட்டன. அனைத்து சட்ட ஆவணங்களிலும் எசுப்பானியம் தவிர்த்த மற்ற மொழிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. நெப்போலிய , கார்லிசுட்டு போர்கள் நடைபெற்றபோதிலும் காத்தலோனியா பொருளியல் வளர்ச்சியையும் தொழில்மயமாக்கலையும் கண்டது. 19ஆவது நூற்றாண்டில் பண்பாட்டு மறுமலர்ச்சி ஏற்பட்டது; காத்தலோனிய தேசிய உணர்ச்சியும் வளர்ந்தோங்கியது. இக்காலத்தில் பல தொழிலாளர் இயக்கங்கள் உருவாகின. 1913இல் நான்கு காத்தோலோனிய மாநிலங்களும் பொதுநலவாயமொன்றை உருவாக்கிக் கொண்டன. இரண்டாவது எசுப்பானியக் குடியரசு (1931–39), காலத்தில் மக்களாட்சி மலர்ந்த நேரத்தில் காத்தலோனிய அரசு மீள்விக்கப்பட்டது. எசுப்பானிய உள்நாட்டுப் போரை அடுத்து சர்வாதிகாரியாக பிரான்சிஸ்கோ பதவியேற்ற பிறகு அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டது; காத்தலோனிய அமைப்புகள் அழிக்கப்பட்டன, மீண்டும் அலுவல்முறை பயன்பாடுகளில் காத்தலோனிய மொழிக்கு தடை விதிக்கப்பட்டது. 1950களிலும் 1960களிலும் காத்தலோனியா குறிப்பிடத்தக்க பொருளியல் முன்னேற்றத்தைக் கண்டது. முதன்மையான சுற்றுலா இடமாக மாறியது. இதனால் எசுப்பானியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தொழிலாளிகள் கோத்தலோனியாவிற்கு குடி பெயர்ந்தனர். பார்செலோனா ஐரோப்பாவின் மிகப் பெரிய பெருநகரப் பகுதிகளில் ஒன்றானது. 1975 - 82இல் எசுப்பானியா மக்களாட்சிக்கு மாறியபோது காத்தலோனியாவிற்கு அரசியல் மற்றும் பண்பாட்டு தன்னாட்சி வழங்கப்பட்டது;எசுப்பானியாவின் மிகவும் துடிப்பான சமூகங்களில் ஒன்றாக காத்தலோனியா விளங்குகின்றது. காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia