காந்தாரி மிளகாய்
காந்தாரி மிளகாய் அல்லது கோல்கொண்டா மிளகாய் (Capsicum frutescens) காய்கறிகளில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இம் மிளகாய் சிவப்பு மிளகாய் அல்லது கார மிளகாய் என அழைக்கப்படுகிறது கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் பகுதிகளிலும் நீலகிரி மாவட்டம், பந்தலுார், கூடலுார் பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகிறது. காந்தாரி மிளகாயின் பயிர்க் காலம் 100-120 நாட்கள். நன்கு உழப்பட்ட வளமான வண்டல்மண் இப்பயிருக்கு ஏற்றது. இப்பயிருக்கு நாற்றாங்கால் அமைக்கப் பொருந்தமான காலம் மே – ஜீன் மாதங்களாகும். அளவில் சிறியதாக இருந்தாலும் அதிகளவு காரமுடையது. துவக்கத்தில் மஞ்சள் அல்லது பச்சை நிறங்களில் காணப்படும். முதிர முதிர, சிகப்பு நிறமாகி விடுகிறது. இதன் விதைகள் கருப்பைச் சுவருடன் ஒட்டியமைந்துள்ளது. மிளகாயின் நடுப்பகுதியிலுள்ள நஞ்சுக்கொடியில் ‘கேப்சின்’ எனும் காரச்சத்துள்ளது. இதிலுள்ள கேப்சைசின் வீதம் 0.2-0.4%. இதரவகை மிளகாய்களைவிட இதன் கேப்சினின் அளவு 0.5% அதிகமாகும். இதுவே காந்தாரி மிளகாய் மற்ற வகை மிளகாய்களை விட அதிகக்காரமாக இருப்பதற்குக் காரணமாகும்.[2][3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia