காமா-ஐதராக்சிபியூட்டரால்டிகைடு
காமா-ஐதராக்சிபியூட்டரால்டிகைடு (γ-Hydroxybutyraldehyde) என்பது C4H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் இடைநிலைக் கரிமச் சேர்மமாகும். γ-ஐதராக்சிபியூட்டனால் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. 1,4-பியூட்டேன்டையால் சேர்மத்திலிருந்து உயிரியல்தொகுப்பு வினையின் மூலம் நரம்புக்கடத்தியான காமா-ஐதராக்சிபியூட்டைரிக் அமிலம் தயாரிக்கும் போது காமா-ஐதராக்சிபியூட்டரால்டிகைடு இடைநிலை வேதிப்பொருளாகத் தோன்றுகிறது [1]. 1,4-பியூட்டேன்டையாலைப் போலவே வெளிப்புறத்திலிருந்து எடுத்துக் கொள்ளும்போது இச்சேர்மமும் காமா-ஐதராக்சிபியூட்டைரிக் அமிலத்திற்கு முன்மருந்தாகச் செயல்படுகிறது. இருப்பினும், அனைத்து அலிபாட்டிக் ஆல்டிகைடுகள் போலவே எரிகாரமாகவும், கடுந்துர்நாற்ற நெடியுடையதாகவும் காமா-ஐதராக்சிபியூட்டரால்டிகைடு காணப்படுகிறது. எனவே, விரும்பத்தகாத இச்சேர்மத்தை உட்கொள்ள நேர்ந்தால் கடுமையான குமட்டலும் வாந்தியெடுப்பும் நிகழ்கின்றன. வளர்சிதைமாற்ற வழிமுறை![]() மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia