காயத்திரி ரகுராம்
காயத்திரி ரகுராம் (Gayathri Raguram, பிறப்பு: 23 ஏப்ரல் 1984) தென்னிந்திய திரைப்படத் துறையில் பணிபுரிந்த ஒரு இந்திய நடனக் கலைஞரும், நடிகையும் ஆவார். இவர் பிரபலமான நடன இயக்குனரான ரகுராமின் மகள் ஆவார். காயத்ரி 2002 ஆம் ஆண்டு சார்லி சாப்ளின் திரைப்படத்தில் ஒரு நடிகையாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார், சில வருட இடைவெளிக்குப் பிறகு, அவர் 2008 இல் திரைப்படங்களில் நடன அமைப்பு செய்யத் தொடங்கினார். இவர் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக உள்ளார். தனிப்பட்ட வாழ்க்கைரகுராம் மற்றும் கிரிஜா ரகுராம் ஆகிய நடன அமைப்பாளர் தம்பதிகளுக்கு இரண்டாவது மகளாக பிறந்தார் காயத்திரி.[1] அவரது மூத்த சகோதரி சுஜா ஒரு முன்னணி நடனக் கலைஞர் ஆவார். இவரது அக்காவும் முன்பு நடிகையாக பணிபுரிந்தார்.[2] இவர் இயக்குநர் கே. சுப்ரமணியனின் கொள்ளு பேத்தி ஆவார். இவரது தாயார் கிரிஜா அவர்களும் நடனக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது அம்மாவில் தங்கைகளில் இருவர் புகழ் பெற்ற நடன அமைப்பாளர்கள் கலா மற்றும் பிருந்தா ஆகியோர் ஆவர்.[3] 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கலிபோர்னியாவில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர் தீபக் சந்திரசேகர் உடன் காயத்ரி திருமணம் செய்தார். பின்னர் திசம்பர் 2006இல் தமிழ்நாட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினர். அதில் பல தமிழகத்தைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர். 2008 இல், தீபக் மற்றும் அவரது பெற்றோர்கள் தன்னை கொடுமை செய்ததாக கூறி அதன் அடிப்படையில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். பின்னர் 2010இல் விவாகரத்து வழங்கப்பட்டது.[4] அரசியல் வாழ்க்கைபி.ஜே.பி தலைவர் அமித் ஷா முன்னிலையில் 2014 ஆம் ஆண்டில் கட்சியில் சேர்ந்தார். நவம்பர் 2015 இல், காயத்ரி தமிழ்நாட்டில் கலைகளுக்கான பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலை குப்புசாமியின் தலைமையில் கட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனும் குற்றம்சாட்டி கட்சியில் இருந்து சனவரி 3, 2023இல் விலகினார்.[5] 19 ஜனவரி 2024 அன்று, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.[6] 2 மார்ச் 2024 அன்று, காயத்ரி ரகுராம் அதிமுகவின் மகளிர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[7] திரைப்பட வரலாறு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia