காயத்ரி தேவி (பீகார்)
காயத்ரி தேவி என்ற காயத்ரி யாதவ் (பிறப்பு 1964) பீகாரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 2015-ல் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பரிகார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3] ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்விதேவி பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள கொய்லி பிரான் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் 9ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார்.[4] வாழ்க்கைதேவி பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம் நரேசு பிரசாத் யாதவின் மனைவி ஆவார்.[5] இவரது கணவர் இராம் நரேசு யாதவ், சீதாமரி ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் சிறையில் உள்ளார்.[6] அரசியல்1990ல் தேவி அரசியலில் சேர்ந்தார். சீதாமரி பாஜக பெண் பிரிவில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டசபைத் தேர்தலில் பரிகார் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் தனது நெருங்கிய போட்டியாளரான இராச்டிரிய ஜனதா தள ராம்சந்திர பூர்வேவை தோற்கடித்தார்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia