கார்ட்டோசாட்-2பி
கார்ட்டோசாட்-2பி (Cartosat 2B) என்பது கதிரவனொத்துப் பாதையில் வலம்வரும் ஓர் புவிநோக்குச் செயற்கைக்கோள் அல்லது செய்மதியாகும். 694 கிலோ எடையுள்ள இந்த கோளானது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பதினேழாவது இந்தியத் தொலையுணர்வு செயற்கைக்கோள் ஆகும்[2]. இது 116 கிலோ அல்ஜிரிய செயற்கைக்கோள், கனடா ( டோர்ரொண்டோ பல்கலைக்கழகம்) மற்றும் சுவிசர்லாந்தின் இரு நானோ செயற்கைக்கோள்கள், ஸ்டுட்சாட் (STUDSAT), ஒரு பிகோ செயற்கைக்கோள் (1 கிலோ எடை விட குறைந்தது) ஆகியவற்றோடு 2010 சூலை 12 ஆம் நாளன்று ஸ்ரீகரிகோட்டா ஏவுதளத்தில் முனைய துணைக்கோள் ஏவுகலத்தினால்(PSLV-C15) செலுத்தப்பட்டது.[3]. இந்த செயற்கைக்கோள் மின்காந்த நிறமாலையில் உள்ள பூமியின் காண்பகுதியை கருப்பு வெள்ளை படமாக எடுக்கக் கூடிய சகலநிறமுணர் (சநிமு) படம்பிடி கருவியை ஏந்தி சென்றது. மேலும் அது 45 பாகை அளவிற்கு நகரும் பாதைத்திருப்பங்களை அடிக்கடி மேற்கொள்ளும் வகையில் அமைந்ததாகும். சூலை 22, 2010 அன்று கார்டோசாட்-2பி தனது விண்வெளிப் பாதையில் இருந்து அலகாபாத்தின் கோட்டை, திரிவேணி சங்கம் மற்றும் மதுரையின் மீனாட்சி அம்மன் கோவில் ஆகியற்றை படம் எடுத்த புகைப்படங்களை வெளியிடப்பட்டது[4]. இந்த புகைப்படங்கள் 0.8 மீ பிரிதிறன் உடையது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 0.8 மீ உயரம் உள்ள பிம்பப்புள்ளியைக் கூட புகைப்படங்களில் தெளிவாய் காணலாம். 64 கிகா பைட்டுகள் கொள்ளளவு கொண்ட திண்மநிலைப் பதிவி இவ்வகையான புகைப்படங்களை பதிவு செய்ய அந்த கோளில் பொருத்தப்பட்டுள்ளது [5]. புதிய தொழில்நுட்பங்கள்கார்ட்டோசாட்-2 விண்ணை அடைந்ததும் சில தொந்தரவுகள் தந்தன. கார்ட்டோசாட்-2எ மேம்பட்ட ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் தற்போது கார்ட்டோசாட்-2பி பல புதிய தொழில்நுட்பங்களை கொண்டு நன்கு மேம்பட்ட புவிநோக்குச் கோளாக விளங்குகிறது. இதில் இரண்டு ஆடிகள் கொண்ட ஒற்றை அச்சு ஒளிப்படக் கருவி பொருத்தப்பட்டிருகிறது. இது கரிமப் பூச்சு வலுவூட்டு நெகிழி அடிப்படையிலான ஒளிக் கட்டகம், குறைந்த எடை, பெரிய வடிவ ஆடிகள், JPEG தரவு குறுக்கம், மேம்பட்ட திண்மநிலைப் பதிவி, உயர்-முறுக்கு எதிர்வினை சக்கரங்கள் மற்றும் அதிசெயல்திறன் கொண்ட விண்மீன் உணரிகள் போன்ற பல தொழில்நுட்பங்களைக் கொண்டதாகும்[6]. கலைச்சொற்கள்மேற்கோள்கள்
மேலும் பார்க்க |
Portal di Ensiklopedia Dunia