கார்பன் வரவினம்
கார்பன் வரவினங்களை, தங்களது கார்பன் உமிழ்வுதடத்தை தன்னார்வ அடிப்படையில் குறைக்க விரும்பும் வர்த்தகரீதியான மற்றும் தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு விற்கும் பல நிறுவனங்களும் உள்ளன. இந்த கார்பன் வரன்படுத்தும் நிறுவனங்கள், தனித்தனியான திட்டங்களிடம் இருந்து வரவினங்களை சேகரித்து வைத்திருக்கும் முதலீட்டு நிதியம் அல்லது கார்பன் மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து, வரவினங்களை கொள்முதல் செய்து கொள்கின்றன. இந்த வரவினங்களின் தரம் என்பது ஒரு பகுதியில், கார்பன் திட்டத்திற்கு ஆதரவு அமைப்பாக செயல்படும் நிதியம் அல்லது மேம்பாட்டு நிறுவனத்தின் தரநிர்ணய செயல்முறை அல்லது தொழில்திறத்தின் அடிப்படையிலானதாகும். இது அவர்களின் விலையில் பிரதிபலிக்கும்; தன்னார்வ அலகுகள் பொதுவாக கடுமையான தரப் பரிசோதனை சுத்த மேம்பாடு செயல்முறை[1] மூலம் விற்கப்படும் அலகுகளைக் காட்டிலும் மதிப்பு குறைவானதாக இருக்கும். கார்பன் வரவினங்களில் இரண்டு தனித்துவமான வகைகள் உள்ளன: கார்பன் சமப்படுத்தும் வரவினம் (COC) மற்றும் கார்பன் குறைப்பு வரவினம் (CRC). கார்பன் சமப்படுத்தும் வரவினங்கள் காற்று, சூரிய ஒளி, நீர் மற்றும் உயிரி எரிபொருள்களில் இருந்தான எரிசக்தி உற்பத்தியின் தூய வடிவங்களைக் கொண்டதாகும். கார்பன் குறைப்பு வரவினங்கள், நமது வளிமண்டலத்தில் இருந்து கார்பனை உயிரியல்ரீதியாக பிரித்து (காடுகளை வளர்ப்பது, மற்றும் பாதுகாப்பது) சேமிப்பது மற்றும் சேகரிப்பதையும், கடல் மற்றும் மண்ணில் இருந்தும் பிரித்தெடுத்து சேமிப்பது மற்றும் சேகரிப்பதையும் அடக்கியதாகும். இரண்டு அணுகுமுறைகளுமே உலகளாவிய கார்பன் உமிழ்வு நெருக்கடிகளைக் குறைப்பதற்கான திறம்பட்ட வழிகளாக அறியப்பட்டுள்ளன. பின்புலம்மரபு எரிபொருள்களின் எரிப்பு தான் தொழில்துறைரீதியாக பசுமைக்குடில் வாயு உமிழ்வுகளின் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. குறிப்பாக மரபு எரிபொருட்களை (நிலக்கரி, நிலக்கரியில் இருந்து பெறப்படும் மின்சாரம், இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய்) சார்ந்திருக்கும் மின்சாரம், சிமிட்டி, இரும்பு, ஆடை, உரம் மற்றும் பல பிற துறைகள். கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஹைட்ரோஃபுளூரோகார்பன்கள் (HFC) போன்றவை தான் இந்த தொழிற்சாலைகளால் உமிழப்படும் பிரதான பசுமைக்குடில் வாயுக்களாகும். இவை அனைத்துமே அகச்சிவப்பு சக்தியை தக்க வைக்கும் வளி மண்டலத்தின் திறனை அதிகரித்து காலநிலையைப் பாதிக்கின்றன. உமிழ்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அவசியம் குறித்து அதிகரித்து வரும் விழிப்புணர்வின் ஒரு விளைவே இந்த கார்பன் வரவினங்கள் குறித்த கருத்து பிறந்ததற்கான காரணம் ஆகும். காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு தெரிவித்திருப்பன[2] பின்வருமாறு:
170க்கும் அதிகமான நாடுகளுக்கு இடையே செய்யப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமான கியோட்டோ நெறிமுறையில் இந்த வழிமுறை முறையாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வந்த மாராகேஷ் இணக்கங்கள் (Marrakesh Accords) மூலம் சந்தை வழிமுறைகள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. சில தொழில்துறை மாசுப்பொருட்களைக் குறைப்பதற்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதான அமெரிக்க அமில மழைத் திட்டத்தினை ஒத்த வகையில் இந்த வழிமுறை அமைக்கப்பட்டுள்ளது. உமிழ்வு ஏற்புவரம்புகள்இந்த நெறிமுறைகள் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கான பசுமைக்குடில் வாயுக்களுக்கான அதிகப்பட்ச அளவு 'வரம்பு' அல்லது ஒதுக்கீடுகளின் மீது ஒப்புக்கொண்டது. இது இணைப்பு I[3] இல் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நாடுகள், அதேபோல், தங்கள் நாட்டு வணிக நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் நிறுவியவற்றில் இருந்து வெளியாகும் உமிழ்வுகள் மீது ஒதுக்கீட்டு வரம்புகளை நிர்ணயிக்கின்றன. தங்கள் சொந்த நாட்டின் 'பதிவகங்கள்' மூலம் நாடுகள் இதனை நிர்வகிக்கின்றன. இந்த பதிவகங்கள் UNFCCC[4] மூலம் தரப் பரிசோதனை செய்யப்படுகின்றன; கண்காணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆபரேட்டருக்கும் வரவின ஏற்பு வரம்பு ஒன்று உள்ளது. இதன்படி ஒவ்வொரு அலகும் அதன் உரிமையாளருக்கு ஒரு மெட்ரிக் டன் கரியமில வாயு அல்லது அதற்கு சமமான பசுமைக்குடில் வாயுவை வெளியிடுவதற்கான உரிமையை வழங்குகிறது. தங்களுக்கு ஒதுக்கீடு செய்த அளவுக்கு இந்த உமிழ்வை செய்யாத ஆபரேட்டர்கள் பயன்படுத்தாத ஒதுக்கீட்டு அளவை கார்பன் வரவினங்களாக விற்பனை செய்யலாம். தங்களது ஒதுக்கீட்டுக்கு மேலாக இந்த உமிழ்வினை வெளியிட நேரும் வணிக நிறுவனங்கள் கூடுதல் ஏற்பு வரம்புகளை வரவினங்களாக கொள்முதல் செய்யலாம். தனிப்பட்ட முறையிலோ அல்லது வெளிப்படையான சந்தை வழியாகவோ. கால வளர்ச்சியில் எரிசக்திக்கான தேவை அதிகரித்துக் கொண்டே சென்றாலும், மொத்த உமிழ்வுகள் வரம்புக்குள் தான் இருந்தாக வேண்டும். இந்த ஏற்பு வரம்புகளை விற்கவும் வாங்கவும் அனுமதிப்பதன் மூலம், ஒரு ஆபரேட்டர் தனது உமிழ்வுகளை குறைப்பதற்கு, 'சுத்தம் காக்கும்' எந்திரங்கள் மற்றும் நடைமுறைகளில் முதலீடு செய்வது அல்லது ஏற்கனவே கூடுதல் 'கொள்திறன்' கொண்டிருக்கும் இன்னொரு ஆபரேட்டரிடம் இருந்து உமிழ்வுகளை கொள்முதல் செய்வது ஆகிய இரண்டு வழிகளில், சிறந்த செலவு குறைந்த வழியை பயன்படுத்த முடியும். 2005 முதல், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளாக அதன் ஐரோப்பிய வர்த்தக திட்டம் (EU ETS) மூலம் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளும் CO2 வர்த்தகத்திற்கு கியோட்டோ வகைமுறையை ஏற்றுக் கொண்டுள்ளன. ஐரோப்பிய ஆணையம் இதன் நிர்ணய அதிகாரம்[5] பெற்றதாய் இருக்கிறது. 2008 முதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் பங்குபெற்றவர்கள் புரோட்டோகாலின் இணைப்பு I மூலம் உறுதிப்படுத்தப் பெற்றுள்ள பிற வளர்ந்த நாடுகளுடன் இணைப்பு கொண்டு, ஆறு மிக முக்கிய மனித இனத்தால் உருவாகும் பசுமைக்குடில் வாயுக்களை வர்த்தகம் செய்வது கட்டாயம் ஆகும். கியோட்டோ நெறிமுறைகளை உறுதிப்படுத்தாதிருக்கும் அமெரிக்காவிலும், மற்றும் மார்ச் 2008 முதல் உறுதிப்படுத்தல் அமலாக்கத்திற்கு வந்ததான ஆஸ்திரேலியாவிலும், இதேபோன்ற திட்டங்கள் கருதப்பட்டு வருகின்றன. கியோட்டோவின் 'நெகிழ்வான வகைமுறைகள்'ஒரு வரவினமானது வரம்பு-மற்றும்-வர்த்தக திட்டத்தின் தேசிய நிர்வாகிகள் மூலம் ஆரம்பத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டதான அல்லது ஏலம் விடப்பட்டதான உமிழ்வு ஏற்புவரம்பாக இருக்கலாம். அல்லது உமிழ்வுகளின் ஒரு சமப்படுத்தப்பட்ட அளவாக இருக்கலாம். இத்தகைய சமப்படுத்தல் அல்லது குறைப்பு நடவடிக்கைகள், கியோட்டோ நெறிமுறையை உறுதி செய்திருப்பதோடு தனது கார்பன் திட்டத்தை UNFCCC அங்கீகாரம் பெற்ற வகைமுறைகளில் ஒன்றின் மூலமாக தரப் பரிசோதனை செய்வதற்குரிய தேசிய ஒப்பந்தத்தை அமலாக்கம் செய்திருக்கக் கூடிய எந்தவொரு வளரும் நாட்டிலும் செய்யப்படலாம். அங்கீகாரம் கிட்டியதும், இந்த அலகுகள் சான்றிதழ் பெற்ற உமிழ்வு குறைப்புகள் அல்லது CERகள் என்று அழைக்கப்படுகின்றன. கியோட்டோ வர்த்தக காலத்திற்கு முன்கூட்டியே இந்த திட்டங்கள் கட்டுமானம் செய்யப்படுவதற்கும் வரவினங்களைப் பெறுவதற்கும் நெறிமுறைகள் அனுமதிக்கின்றன. வளர்ந்த நாடுகளில் இருக்கும் ஆபரேட்டர்கள் பசுமைக்குடில் வாயு குறைப்பு வரவினங்களை[6] கொள்முதல் செய்வதற்கு மூன்று வகைமுறைகளை கியோட்டோ நெறிமுறை வழங்குகிறது:
இந்த கார்பன் திட்டங்கள் ஒரு தேசிய அரசாங்கத்தாலோ அல்லது நாட்டிற்குள் இருக்கும் ஒரு ஆபரேட்டர் மூலமோ உருவாக்கப்படலாம். யதார்த்தத்தில், அநேக பரிவர்த்தனைகள் தேசிய அரசாங்கங்களால் நேரடியாக மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக தங்களின் நாடுகளால் ஒதுக்கீட்டு அளவு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஆபரேட்டர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. உமிழ்வு சந்தைகள்வர்த்தக நோக்கங்களுக்கு, ஒரு ஏற்பு வரம்பு அல்லது CER ஒரு மெட்ரிக் டன் CO2 உமிழ்வுக்கு சமமானதாய் கருதப்படுகிறது. இந்த ஏற்பு வரம்புகள் தனிப்பட்ட முறையிலோ அல்லது சர்வதேச சந்தை நிலவரத்தின் படியோ விற்கப்பட முடியும். இந்த வர்த்தகமும் விநியோகமும் சர்வதேச அளவில் நடைபெறுவதால் ஏற்பு வரம்புகள் நாடுகளிடையே பரிவர்த்தனை செய்யப்பட அனுமதிக்கிறது. ஒவ்வொரு சர்வதேச பரிவர்த்தனையும் UNFCCC மூலம் சோதிப்பு அங்கீகாரம் செய்யப்படுகிறது. ஒரு சந்தை விலையை கண்டறிய உதவவும் புழக்கத்தை பராமரிக்கவும் ஏற்பு வரம்புகளுக்கான ஒரு உடனடி சந்தையையும், அத்துடன் வருங்கால கொள்முதலுக்கான சந்தையையும் வழங்கும் பொருட்டு காலநிலை பரிவர்த்தனை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. கார்பன் விலைகள் பொதுவாக ஒரு டன் கரியமில வாயு அல்லது அதற்கு நிகரான வாயுக்களுக்கு (CO2e) யூரோக்களில் ஏலவிலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. பிற பசுமைக்குடில் வாயுக்களும் வர்த்தகம் செய்யப்படலாம். ஆனால் இவை அவற்றின் உலக வெப்பமயமாக்கல் திறனைப் பொறுத்து கரியமில வாயுவின் நிர்ணயித்தல் பெருக்கல் தொகைகளாகக் குறிப்பிடப் பெற்று வர்த்தகம் செய்யப்படும். இந்த அம்சங்கள் வணிகத்தில் ஒதுக்கீட்டின் நிதித் தாக்கத்தை குறைக்கின்றன. அதே சமயத்தில் இந்த ஒதுக்கீடுகள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பூர்த்தி செய்யப்படுவதையும் உறுதி செய்கின்றன. நடப்பில் கார்பன் ஏற்பு வரம்புகளில் பரிவர்த்தனையில் ஈடுபடும் ஐந்து பரிவர்த்தனை மையங்கள் உள்ளன: சிகாகோ காலநிலை பரிவர்த்தனை மையம், ஐரோப்பிய காலநிலை பரிவர்த்தனை, நோர்ட்பூல், பவர்நெக்ஸ்ட் மற்றும் ஐரோப்பிய எரிசக்தி பரிவர்த்தனை மையம் ஆகியவை. சமீபத்தில் நோர்ட்பூல், சான்றிதழ் பெற்ற உமிழ்வு குறைப்புகள் என்று அழைக்கப்படும் ஒரு CDM கார்பன் திட்டத்தால் உருவாக்கப்படும் சமப்படுத்தல்களை வர்த்தகம் செய்வதற்கான ஒரு ஒப்பந்தத்தை பட்டியலிட்டது. பரிவர்த்தனை மையங்களில் விற்கப்படத்தக்க வரவினங்களை உருவாக்கும் உமிழ்வு குறைப்பு, சமப்படுத்தல், மற்றும் காடுகள் உருவாக்க திட்டங்களில் இப்போது பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. CantorCO2e[7] என்னும் குறைந்தது ஒரு தனியார் மின்னணு சந்தையேனும் 2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ளது. உமிழ்வு நிர்வாகம் என்பது லண்டன் நகரின் மிகவும் துரித வளர்ச்சி காணும் நிதி சேவைகளில் ஒன்றாக ஆகியிருக்கிறது. இப்போது 30 பில்லியன் யூரோக்கள் மதிப்புடையதாக இருக்கும் இச்சந்தை, ஒரு தசாப்த காலத்திற்குள் 1 டிரில்லியன் யூரோக்கள் மதிப்பிற்கு வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[மேற்கோள் தேவை] "கார்பன் உலகின் மிகப்பெரிய பண்டச் சந்தையாக இருக்கும். அத்துடன் அது உலகின் ஒட்டுமொத்த மிகப் பெரிய சந்தையாகவும் ஆகலாம்" என்று பார்க்ளேஸ் கேபிடல் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் சந்தைகள் பிரிவு தலைவரான லூயிஸ் ரெட்சா கணிப்பு வெளியிட்டுள்ளார்.[8] கார்பனுக்கு சந்தை விலையை நிர்ணயித்தல்
கணக்கின்றி எரிசக்தி உபயோகிப்பதும் அதனால் விளையும் உமிழ்வு அளவுகளும் தொடர்ந்து அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. எனவே வரவினங்களை வாங்க வேண்டிய நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தேவை மற்றும் விநியோக விதிகள் சந்தை விலையை மேலே தள்ளும். இது விற்பனைக்குரிய கார்பன் வரவினங்களை உருவாக்க சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிகமான குழுக்களை ஊக்கப்படுத்தும். கியோட்டோ ஒதுக்கீட்டு அளவு அலகு (AAU) அல்லது அதற்கு ஏறக்குறைய சமமான ஐரோப்பிய ஒன்றிய ஏற்புவரம்பு (EUA) போன்ற தனிப்பட்ட ஏற்புவரம்பு, CER போன்ற ஒரு சமப்படுத்தலில் இருந்து மாறுபட்ட சந்தை மதிப்பைக் கொண்டிருக்கலாம். CERகளுக்கு ஒரு மேம்பட்ட இரண்டாம் நிலைச் சந்தை இல்லாததும், விலை நிர்ணயிப்பதில் சிக்கலளிக்கும் விதமாக திட்டங்களுக்கு இடையே சீரான செயலமைப்பு இல்லாததும், அத்துடன் துணையுதவி கோட்பாடு மற்றும் அதன் ஆயுள்காலம் குறித்த பிரச்சினைகளுமே இதற்குக் காரணம். கூடுதலாக, சுத்த மேம்பாட்டு வகைமுறையின் கீழ் ஒரு கார்பன் திட்டத்தால் உருவாக்கப்படும் சமப்படுத்தல்கள் மதிப்பில் குறைந்த திறன் கொண்டவையாக இருக்கின்றன. ஏனெனில் இந்த நெகிழ்வுற்ற வகைமுறைகள் மூலம் எத்தனை சதவீத ஏற்புவரம்பை பூர்த்தி செய்யலாம் என்பதில் EU ETS ஆபரேட்டர்கள் வரம்புபடுத்தப் பெற்றுள்ளனர். பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வை திறம்பட குறைக்க அவசியமான நடத்தை மாற்றங்கள் மற்றும் பொருளாதார உற்பத்தி அமைப்புகளிலான மாற்றங்களை ஊக்குவிக்க போதுமான அளவிற்கு கார்பனின் விலை அதிகமாக இருக்க வேண்டும் என்று யேல் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் நோர்டாஸ் வாதிடுகிறார்.
கார்பன் உமிழ்வுகளின் சமூக செலவின் அடிப்படையில் உகந்த விலையாக ஒரு டன்னுக்கு சுமார் 30 அமெரிக்க டாலர் விலை வைக்கலாம் என்பதாய் நோர்தாஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார். பணவீக்கத்துடன் இதன் விலையும் உயரும்.
William Nordhaus, 2008. பரணிடப்பட்டது 2008-09-10 at the வந்தவழி இயந்திரம்A Question of Balance - Weighing the Options on Global Warming Policies, Yale University Press. பரணிடப்பட்டது 2008-09-10 at the வந்தவழி இயந்திரம் கார்பன் வரவினங்கள் வாங்குவது உமிழ்வு அளவுகளை எவ்வாறு குறைக்கும்?காற்று மாசுபாட்டுக்கு ஆகும் செலவுக்கு உரிய நிதி மதிப்பை அளிப்பதன் மூலம் பசுமைக்குடில் உமிழ்வுகளைக் குறைப்பதற்கான ஒரு சந்தையை கார்பன் வரவினங்கள் உருவாக்குகின்றன. உமிழ்வுகள் வணிக நடைமுறையின் ஒரு உள்முக செலவாக ஆவதோடு வரவு செலவு அறிக்கையிலும் கச்சாப்பொருட்கள் மற்றும் பிற கடன்கள் மற்றும் சொத்துகள் ஆகியவற்றோடு காணத்தக்கதாய் ஆகிறது. உதாரணமாக, வருடத்திற்கு 100,000 டன்கள் பசுமைக்குடில் வாயு உமிழ்வுகள் கொண்ட ஒரு ஆலையை ஒரு வணிகம் கொண்டுள்ளது எனக் கருதுவோம். இந்த வணிகம் இணைப்பு I இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு அரசாங்கத்தின் கீழ் வருகிறது. அந்த அரசாங்கம் அந்த வணிகம் உற்பத்தி செய்யக் கூடிய உமிழ்வுகளுக்கு வரம்பு நிர்ணயித்து சட்டத்தை இயற்றியுள்ளது. அச்சட்டத்தின்படி அந்த ஆலைக்கு வருடத்திற்கு 80,000 டன்கள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். ஒன்று இந்த தொழிற்சாலை தனது உமிழ்வுகளை 80,000 டன்கள் அளவுக்குக் குறைக்கிறது. அல்லது அதிகப்படியான அளவைச் சரிக்கட்ட கார்பன் வரவினங்களைக் கொள்முதல் செய்கிறது. மாற்று வழிகளுக்காகும் செலவுகளைக் கணக்கிட்ட பின், அந்த வருடத்தில் புதிய எந்திரங்களில் முதலீடு செய்வது பொருளாதாரரீதியாக உகந்ததல்ல என்றோ அல்லது சாத்தியமல்ல என்றோ வணிகம் தீர்மானிக்கலாம். அதற்குப் பதிலாக சட்டப்பூர்வமாக கார்பன் வரவினங்களை விற்க அங்கீகாரம் பெற்றிருக்கும் அமைப்புகளிடம் இருந்து பகிரங்க சந்தையில் இருந்து கார்பன் வரவினங்களை வாங்கிக் கொள்ள அது தேர்வு செய்யலாம். மாற்று எரிசக்தி ஆதாரங்களை உற்பத்தி செய்வதால் விளையும் பாதிப்புகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு பெரிய காற்றாலை டர்பைனை தயாரிப்பதற்கும் போக்குவரத்து செய்வதற்கும் நுகரப்படும் எரிசக்தி மற்றும் உமிழப்படும் கார்பன் ஆகியவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இதற்கு ஒரு கார்பன் வரவினம் வழங்கப்படுவதை தடுக்கலாம்.
வரவினங்கள் மற்றும் வரிகள்கார்பன் வரவினங்கள் மற்றும் கார்பன் வரிகள் இரண்டுமே தமக்குரிய அனுகூலத்தைக் கொண்டுள்ளன. கார்பன் வரிகளுக்கான ஒரு மாற்றாக கியோட்டோ நெறிமுறையில் கையெழுத்திட்ட நாடுகள் வரவினங்களை தேர்வு செய்தன. வரி-திரட்டும் திட்டங்கள் மீதான ஒரு விமர்சனம் என்னவென்றால், அவை பல சமயங்களில் உரிய முறையில் கொண்டு செலுத்தப்படுவதில்லை. எனவே இதற்கென அரசாங்கம் திரட்டும் வரி நிதியில் கொஞ்சம் அல்லது அனைத்துமே திறனற்ற வகையிலோ அல்லது சுற்றுச்சூழலுக்கு அனுகூலமற்ற வகையிலோ பயன்படுத்தப்படலாம். உமிழ்வுகளை ஒரு சந்தை பண்டமாக அணுகுவதன் மூலம் அவற்றின் செயல்பாடுகளை புரிந்து கொள்வதும் நிர்வகிப்பதும் வணிகங்களுக்கு எளிதாகிறது. அதே சமயத்தில் பொருளாதார நிபுணர்களும் வர்த்தகர்களும் நன்கு புரிந்து கொள்ளப்பட்ட சந்தை தத்துவங்கள் மூலம் வருங்கால விலை நிர்ணய அமைப்பை கணிக்க முயல முடியும். இவ்வாறாக ஒரு கார்பன் வரியைக் காட்டிலும் ஒரு பரிவர்த்தனை செய்யத்தக்க கார்பன் வரவினத்தின் முக்கியமான அனுகூலங்கள் என்னவென்றால்:
ஒரு கார்பன் வரியின் அனுகூலங்களாவன:
உண்மையான கார்பன் வரவினங்களை உருவாக்குதல்கியோட்டோ நெறிமுறையின் துணையுதவி கோட்பாட்டின் படி (The principle of Supplementarity) ஒரு நாடு கார்பன் வரவினங்களை வாங்குவதற்கு முன்னதாக உமிழ்வுகளின் உள்முகக் குறைப்பு நடைபெற வேண்டும். ஆயினும் ஒரு நெகிழ்வுற்ற வகைமுறையாக இது சுத்த மேம்பாட்டு வகைமுறையையும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி வரம்புபட்ட ஸ்தாபகங்கள் வரம்புக்கு வெளியிலான துறைகளில் தன்னார்வ அடிப்படையில் உண்மையான, அளவிடத்தக்க, நிரந்தரமான உமிழ்வுக் குறைப்புகளை உருவாக்க முடியும். CO2-நிகரான பசுமைக்குடில் வாயு உமிழ்வு உண்மையாகவே குறைக்கப்பட்டுள்ளது என்பதை நிறுவுவதே ஒரு சிக்கலான செயல்முறை என்கிற உண்மையில் இருந்து தான் கார்பன் வரவினங்கள் குறித்த அநேக விமர்சனங்கள் பிறக்கின்றன. ஒரு கார்பன் திட்ட கருத்தாக பரிணாமமுற்ற இந்த செயல்முறை கடந்த 10 ஆண்டுகளில் மேலும் மேலும் தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கார்பன் திட்டம் உண்மையான, அளவிடத்தக்க, நிரந்தரமான உமிழ்வுக் குறைப்புக்கு சட்டப்பூர்வமாக இட்டுச் சென்றிருக்கிறதா இல்லையா என்பதை நிர்ணயம் செய்வதற்குரிய முதல் படி CDM செயல்முறையின் வழிமுறைகளைப் புரிந்து கொள்வதாகும். இந்த செயல்முறையின் மூலமாகத் தான் திட்ட ஆதரவாளர்கள் உமிழ்வுக் குறைப்பு உருவாக்கத்திற்கான தங்கள் கருத்துகளை ஒரு உரிய செயல்பாட்டு பொறுப்பின் (DOE) மூலம் சமர்ப்பிக்கின்றனர். CDM நிர்வாக வாரியம், CDM வழிமுறை குழு மற்றும் அவற்றின் நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு திட்டத்தையும் திறனாய்வு செய்து, அத்துடன் கூடுதலமைவான[11] குறைப்புகளில் உண்மையாகவே அது எவ்வாறு விளைகிறது என்பதையும் தீர்மானிக்கிறது. கூடுதலமைவு (Additionality) மற்றும் அதன் முக்கியத்துவம்
எந்த கார்பன வரவினத்திற்கும் கூடுதலமைவு என்கிற ஒரு கருத்தை நிரூபணம் செய்வதும் மிக முக்கியமாகும். கார்பன் வரவினங்கள் மூலம் வருவாய் இல்லாதிருந்திருந்தால் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்குமா என்கிற கேள்விக்கு கூடுதலமைவு கருத்து விடையளிக்கிறது. எவ்வாறிருந்தாலும் வழக்கம் போல் நிகழ்ந்திருக்கக் கூடிய திட்டங்களுக்கு "கூடுதலான" திட்டங்களில் இருந்து வரக் கூடிய கார்பன் வரவினங்கள் மட்டுமே மொத்தமாய் சுற்றுச்சூழல் நன்மைக்கு பங்களிப்பு செய்திருப்பதாய் கணக்கில் கொள்ளத்தக்கது. கார்பன் வரவினங்கள் மூலம் வருவாய் கிட்டாதிருந்தாலும் கூட பெரும் நிதி வருவாய்களை ஈட்டித் தரக் கூடிய கார்பன் திட்டங்கள்; அல்லது கட்டுப்பாடுகளின் நிர்ப்பந்தத்தால் செய்யப்படுபவை; அல்லது ஒரு துறையில் பொதுவான நடைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் திட்டங்கள் எல்லாம் கூடுதலமைவாய் கருதப்பட மாட்டாது. கூடுதலமைவை முழுமையாய் நிர்ணயம் செய்வதற்கு நிபுணத்துவ திறனாய்வும் அவசியப்படுகிறது. கார்பன் சமப்படுத்தல் திட்டங்கள் கூடுதலமைவு தன்மையையும் நிரூபணம் செய்தால் தான் கார்பன் வரவினம் செயல்முறை மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை தலைமையேற்றுச் செல்வதாக கூறப்படுவதற்கு அர்த்தமிருப்பது உறுதிப்படும் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. உலக வள ஆதார நிறுவனம்/பராமரிக்கத்தக்க வளர்ச்சிக்கான உலக வர்த்தக கவுன்சில் (WRI/WBCSD) கூறுவது: "பசுமைக்குடில் வாயு உமிழ்வு வர்த்தகத் திட்டங்கள், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உற்பத்தி ஆதாரங்களில் இருந்தான உமிழ்வுகளுக்கு வரம்பிடுவதன் மூலம் செயல்படுகின்றன. இந்த திட்டங்களின் கீழ், திட்ட எல்லைக்குட்படாத ஆதாரங்களில் நிகழும் திட்ட- அடிப்படையிலான பசுமைக்குடில் வாயு குறைப்புகளுக்கு வர்த்தகம் செய்யத்தக்க 'சமப்படுத்தல் வரவினங்கள்' வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு சமப்படுத்தல் வரவினமும், உமிழ்வு வரம்புக்குட்பட்ட அந்த உற்பத்தித் தளங்களை வரவினத்தால் குறிக்கப்பட்டுள்ள பசுமைக்குடில் வாயு குறைப்புகளுக்கு நேர் விகிதாச்சாரத்தில் அதிகமாக உமிழ அனுமதிக்கிறது. பசுமைக்குடில் வாயு உமிழ்வுகளில் மொத்த அதிகரிப்பை பூஜ்யமாக்குவதை சாதிப்பது தான் இதன் பின்புல யோசனை. ஏனெனில் அதிகரித்த உமிழ்வுகளின் ஒவ்வொரு டன்னும் திட்ட அடிப்படையிலான பசுமைக்குடில் வாயு குறைப்புகள் மூலம் 'சமப்படுத்தல்' செய்யப்படுகின்றன. சிக்கல் என்னவென்றால் பசுமைக்குடில் வாயு உமிழ்வுகளைக் குறைக்கும் (வரலாற்று அளவுகளுடன் ஒப்பிட்டு) பல திட்டங்கள் ஒரு பசுமைக்குடில் வாயு இல்லாதிருந்தால் கூட காலநிலை மாற்றத்தை தணிப்பது குறித்த கவலை ஏதும் இன்றி நிகழ்ந்தேறியிருக்கும் என்பது. அந்த திட்டம் 'எப்படியானாலும் நடந்திருக்கக் கூடிய ஒன்று தான்' எனும்பட்சத்தில், அதன் பசுமைக்குடில் வாயு குறைப்புகளுக்கு சமப்படுத்தல் வரவினங்களை வழங்குவது உண்மையில் பசுமைக்குடில் வாயு உமிழ்வுகளில் மொத்தமாய் பார்க்கையில் ஒரு அதிகரிப்பை தான் குறிக்கும். இது பசுமைக்குடில் வாயு திட்டத்தின் உமிழ்வு இலக்கை பலவீனப்படுத்துவதாய் அமையும். எனவே திட்ட அடிப்படையிலான பசுமைக்குடில் வாயுக் குறைப்புகளை உணர்ந்து கொள்ளும் பசுமைக்குடில் வாயுத் திட்டங்களின் வெற்றிக்கும் ஒருங்கிணைப்புக்கும் கூடுதலமைவு மிக முக்கியமானதாகும்." விமர்சனங்கள்சுற்றுச்சூழல்ரீதியான கட்டுப்பாடுகளும் நடவடிக்கைகளும் வணிகங்கள் மீது கட்டுப்பாடுகளாக திணிக்கப்படுகின்றன. உமிழ்வுகளை நிர்வகிப்பதற்கான இந்த அணுகுமுறை குறித்து பலரும் அதிருப்தி கொண்டுள்ளனர். கியோட்டோ வகைமுறை தான் கார்பன் வரவின நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு சர்வதேசரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும் ஒரே வகைமுறையாகும். அத்துடன், முக்கியமாக, இது கூடுதல் திறம் மற்றும் ஒட்டுமொத்த திறம்பட்டநிலைக்கான சோதனைகளையும் உள்ளடக்கியிருக்கிறது. அதன் ஆதரவு அமைப்பான UNFCCC மட்டும் தான், உமிழ்வு கட்டுப்பாடு அமைப்புகளின் ஒட்டுமொத்த திறம்பாட்டின் மீதும் உலகளாவிய உத்தரவு அதிகாரம் பெற்ற அமைப்பாக இருக்கிறது. கியோட்டோ பரிவர்த்தனை காலம் 2008 முதல் 2012 வரையான ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே செயலுறுத்துவதாய் இருக்கிறது. முன்பு ஆரம்பித்த EU ETS அமைப்பின் முதல் கட்டம், அதற்குப் பிந்தைய மூன்றாவது கட்டத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சர்வதேச ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளவற்றில் ஒத்துழைப்பு கிட்டலாம். ஆனாலும் பசுமைக்குடில் வாயுக்கள் தொடர்பான கியோட்டோ நெறிமுறைக்கு பிந்தைய பேச்சுவார்த்தைகளில் என்ன ஒப்புக்கொள்ளப்படும் என்பது குறித்த பொதுவான நிச்சயமற்ற நிலை ஒன்று நிலவுகிறது. வணிக முதலீடு என்பது பல சமயங்களில் பல தசாப்தங்களுக்கும் கூட நீளக் கூடியது என்பதால், இது முதலீட்டாளர்களின் திட்டங்களுக்கு கூடுதல் அபாயத்தையும் நிச்சயமற்ற நிலையையும் சேர்க்கிறது. உலகளாவிய உமிழ்வுகளில் பெரும் பங்கிற்கு பொறுப்பான பல நாடுகள் (முக்கியமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா) கட்டாய வரம்புகளைத் தவிர்த்திருப்பதால், கார்பன் வரம்பு கொண்ட நாடுகளின் வணிகங்கள் வரம்பு நிறுவாத நாடுகளுடன் ஒப்பிடுகையில் தங்களின் கார்பன் செலவுகள் நேரடியாக தங்கள் மீது சுமத்தப்படுவதால் தங்களுக்கு வணிகரீதியாக அனுகூலமின்மை தோன்றுவதாக உணரலாம். உமிழ்வுகளின் தேசிய அளவிலான உற்பத்தியில் அர்த்தமுள்ள குறிப்பிடத்தக்க குறைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய ஒதுக்கீட்டு அளவுகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது வரம்பு மற்றும் பரிவர்த்தனை அமைப்பின் பின்னிருக்கும் ஒரு முக்கியமான கருத்துரு ஆகும். இது ஒட்டுமொத்த உமிழ்வு அளவு குறைக்கப்படுவதை மட்டுமல்லாமல், உமிழ்வு பரிவர்த்தனை செலவுகள் பரிவர்த்தனை அமைப்பின் அனைத்து தரப்புக்கும் சரியாக பகிரப்படுவதையும் உறுதி செய்கிறது. ஆயினும், வரம்புக்குட்பட்ட நாடுகளின் அரசாங்கங்கள் தாங்களாகவே தங்களது கடமைப்பாடுகளை வலுவிழக்கச் செய்ய தலைப்படலாம். EU ETS இல் பல நாடுகளுக்கான 2006 மற்றும் 2007 தேசிய ஒதுக்கீட்டு திட்டங்களில் இதனைக் காண முடிந்தது. இந்த திட்டங்கள் தாமதமாக சமர்ப்பிக்கப்பட்டதோடு ரொம்பவும் தளர்வாய்[12] இருந்ததற்காக ஆரம்பத்தில் ஐரோப்பிய ஆணையத்தின் மூலம் நிராகரிக்கவும் பட்டன. ஏற்புவரம்புகளுக்கான சட்டவிலக்கு அளிப்பது குறித்து ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. EU ETS க்குள் இருக்கும் நாடுகள் தங்களது உள்வணிகங்களுக்கு அநேக அல்லது அனைத்து ஏற்புவரம்புகளையும் இலவசமாய் அளித்திருக்கின்றன. மின்சார உற்பத்தியாளர்கள் இந்த உமிழ்வு 'கட்டணங்களை' தங்களது வாடிக்கையாளர்கள்[13] தலையில் கட்டுவதன் மூலம் 'எதிர்பாரா அதிர்ஷ்ட' லாபத்தைப் பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. EU ETS தனது இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்து கியோட்டோ உடன் இணையும் போது, கூடுதலான ஏற்புவரம்புகள் ஏலமிடப்படும் என்பதால் இந்த சிக்கல்கள் குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு அர்த்தமுள்ள சமப்படுத்தல் திட்டத்தை ஸ்தாபிப்பது சிக்கலானதாய் இருக்கிறது: CDM வகைமுறைக்கு வெளியேயான தன்னார்வ சமப்படுத்தல் நடவடிக்கைகள் திறம்பட கட்டுப்படுத்தப்படுவதில்லை. இந்த கட்டுப்படுத்தப்படாத நடவடிக்கைகளில் சமப்படுத்தல்கள் குறித்து விமர்சனங்கள் உள்ளன. வரம்பு நிறுவாத நாடுகளில் இருக்கும் சில தன்னார்வ பெருநிறுவன திட்டங்கள் மற்றும் சில தனிநபர் கார்பன் சமப்படுத்தல் திட்டங்களுக்கு இது குறிப்பாகப் பொருந்தும். CDM வரவினங்களின் சோதனை அங்கீகாரம் குறித்தும் கவலைகள் இருக்கின்றன. கூடுதலமைவை (Additionality) துல்லியமாகக் கணக்கிடுவது குறித்தது ஒரு கவலை. ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் பெற எடுக்கும் முயற்சிகள் மற்றும் நேரம் தொடர்பானவை மற்ற கவலைகள். சில திட்டங்களின் பயனளிக்கும் தன்மைக்கு சோதிப்பு அங்கீகாரம் அளிக்கப்படுவது குறித்தும் கேள்விகள் எழலாம்; பல திட்டங்கள் அவை தணிக்கை செய்யப்பட்டதன் பிறகு எதிர்பார்த்த நன்மைகளை சாதிப்பதில்லை என்று தோன்றுகிறது. அத்துடன் CDM வாரியம் குறைந்த எண்ணிக்கையிலான CER வரவினங்களுக்கு மட்டும் தான் ஒப்புதல் அளிக்க முடியும். உதாரணமாக, ஒரு திட்ட வெளியீடு ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டதைக் காட்டிலும் அதிக காலம் எடுக்கலாம். அல்லது ஒரு காடுவளர்ப்பு திட்டம் நோய் அல்லது தீயால் குறைக்கப்படலாம். இந்த காரணங்களால், சில நாடுகள் உள்நாட்டில் அமலாக்கம் செய்கையில் கூடுதலான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. காடு வளர்ப்பு அல்லது நிலப் பயன்பாட்டுத் திட்டங்கள் போன்ற வகையான சில கார்பன் குறைப்பு நடவடிக்கைகளை அனுமதிப்பதில்லை. குறிப்புதவிகள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia