கார்மெலாராம்கார்மேலாரம் கர்நாடக மாநிலத்தில் வர்த்தூர் ஊராட்சிப் பகுதியாக இருந்தது. தற்பொழுது "பிருகத்து பெங்களூரு மகாநகர பாலிகே" எனப்படும் விரிந்த பெங்களூரு மாநகராட்சியின் பகுதியாக உள்ளது. பெங்களூரின் கிழக்கு எல்லைப் புறப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஊர் அதிகம் பரபரப்பு இல்லாத பகுதியாக விளங்குகிறது. தொடருந்து நிலையம்கார்மேலாரத்தில் அமைந்துள்ள தொடருந்து நிலையத்தில் ஓசூர் வழி செல்லும் பெரும்பான்மையான தொடருந்துகள் நின்று செல்கின்றன. அவற்றுள் கண்ணூர்-யெஷ்வந்த்பூர் விரைவுத் தொடருந்து, எர்ணாகுளம்-பெங்களூரு நகரிணைப்பு விரைவுத் தொடருந்து ஆகியவற்றைக் குறிப்பிடலாம். பெயர் விளக்கம்கார்மேலாரம் என்னும் பெயர் கார்மேல்+ஆரம் என்னும் இரு சொற்களின் இணைப்பு ஆகும். இங்கு கத்தோலிக்கத் திருச்சபையின் துறவற அமைப்புகளுள் ஒன்றாகிய கார்மேல் சபை பல கல்வி நிறுவனங்களையும் இல்லங்களையும் நிறுவி நடத்திவருவதால் இப்பெயர் எழுந்தது. இதன் பொருள் கார்மேல் பூந்தோட்டம் என்பதாகும். முக்கிய நிறுவனங்கள்கார்மேலாரத்தில் அமைந்துள்ள முக்கிய நிறுவனங்களுள் சில: 1 AET கல்லூரி |
Portal di Ensiklopedia Dunia