காலியம் அசிடேட்டில் உள்ள பிணைப்பு அயனிகளில் ஒன்று.
காலியம் அசிட்டேட்டு (Gallium acetate) என்பது Ga(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை கொண்டிருக்கும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். காலியம் நேர்மின் அயனிகள் மூன்றும் அசிட்டேட்டு எதிர்மின் அயனிகள் மூன்றும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. காலியம் அசிட்டேட்டு சேர்மத்தில் காலியம் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. சுருக்கமாக இது GaAc என்ற வாய்பாட்டாலும் குறிக்கப்படுவது உண்டு. காலியம் நீரில் மிதமாகக் கரைகிறது. சுமார் 70 பாகை செல்சியசு வெப்பநிலை வரை சூடாக்கப்படும் போது காலியம் ஆக்சைடாக சிதைகிறது. மற்ற அசிடேட்டு சேர்மங்களைப் போலவே, காலியம் அசிடேட்டும் அதி-தூய்மையான சேர்மங்கள், வினையூக்கிகள் மற்றும் நானோ அளவிலான பொருட்கள் தயாரிப்பதற்கான ஒரு நல்ல முன்னோடி சேர்மமாகும்..[2]கால்சியம் குளோரைடு மற்றும் மெக்னீசியம் குளோரைடு போன்ற குளிரூட்டும் சேர்மங்களுக்கு மாற்றாகக் காலியம் அசிடேட்டு கருதப்படுகிறது.[3]
↑Funk, H.; Paul, A. Chemistry of gallium. II. Reactions between gallium and organic compounds. Zeitschrift für Anorganische und Allgemeine Chemie (1965), 337(3-4), 142-4.