காலிஸ்தான் விடுதலைப் படை
காலிஸ்தான் விடுதலைப் படை (Khalistan Liberation Force (சுருக்கமாக:KLF), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாகக் கோரி கிளர்ச்சி செய்யும் காலிஸ்தானிகளின் தீவிரவாத இயக்கம் ஆகும். இந்த இயக்கத்தை இந்திய அரசு தடை செய்துள்ளது.[1]இதனால் காலிஸ்தான் விடுதலைப் படையின் உறுப்பினர்கள் பெரும்பாலும் கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் புலம்பெயர்ந்து இந்தியாவிற்கு எதிரான சதிச் செயல்களில் ஈடுபடுகின்றனர். வரலாறு1984ல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த பிந்தரன் வாலே மற்றும் அவர்தம் கூட்டத்தினரை வெளியேற்றுவதற்காக இந்திய அரசு புளூஸ்டார் நடவடிக்கை எடுத்ததது. இதனை அடுத்து 1986ஆம் ஆண்டில் அரூர் சிங் தலைமையில் பஞ்சாப் தனி நாடு கோரும் காலிஸ்தான் விடுதலைப் படை நிறுவப்பட்டது. 1980 மற்றும் 1990களில் காலிஸ்தான் விடுதலைப் படையின் தீவிரவாதிகள், காஷ்மீர் தனி நாடு கோரும் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து இந்தியாவில் பல குண்டி வெடிப்புகளை நடத்தியது.[2][3][4]1991ஆண்டில் காலிஸ்தான் விடுதலைப்படையினர், ருமோனியாவிற்கான இந்தியத் தூதுவர் ஜுலியோ பிரான்சிஸ் ரிபெய்ரோவை புக்கரெஸ்ட் நகரத்திலிருந்து கடத்திக் கொலை செய்தனர்.[5] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia