கிசன்கர் சமஸ்தானம்
கிஷன்கர் சமஸ்தானம் அல்லது கிஷன்கர் இராச்சியம் (Kishangarh State) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட 565 சுதேச சமஸ்தானங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த சமஸ்தானம் இராஜபுதனம் முகமையில் இருந்த 24 சுதேச சமஸ்தானங்களில் இதுவும் ஒன்றாகும். 1611-ஆம் ஆண்டு முதல் 1818 ஆம் ஆண்டு வரை முடியாட்சியாக இருந்த கிஷன்கர் இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் 1798 முதல் 1805 முடிய செயல்படுத்திய இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் கிஷன்கர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [1][2][3] 15 ஆகஸ்டு 1947 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[4] இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia