கிசோம்பா நடனம்
![]()
இந்நடனம் ஆப்பிக்காவின் செம்பா மற்றும் காம்பஸ் நடனங்களிலிருந்து சில மாற்றங்களுடன் அங்கோலாவில், 1970 களின் முடிவுகளிலிருந்து குடும்ப நிகழ்ச்சிகளில் ஆடப்படுகிறது. ஆப்பிரிக்காவின் கிம் பண்டு மொழியில், கிசோம்பா என்பதற்கு விருந்து நிகழ்ச்சி எனப்பொருளாகும். ஆண்-பெண் இணைந்து ஆடும் கிசோம்பா நடனம், உலகில் மிகவும் கவர்ச்சியான நடனம் எனப்பெற்றது. தற்போது இந்நடனம் போர்த்துக்கல், ஸ்பெயின், செர்பியா, ஐக்கிய இராச்சியம், போலந்து, டென்மார்க், சுவீடன், சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், லிதுவேனியா முதலான ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் எகிப்து, மெக்சிகோ, கனடா, ஐக்கிய அமெரிக்காவில் சில மாற்றங்களுடன் ஆடப்படுகிறது. வரலாறுகாலனிய நாடுகளாக இருந்த ஆப்பிரிக்காவில், ஐரோப்பிய மற்றும் தென் - அமெரிக்கா நாடுகளின் குறிப்பாக அர்ஜெண்டினாவின் பண்பாட்டுத் தாக்கத்தின் விளைவாக, அங்கோலாவின் பாரம்பரிய செம்பா போன்ற நடனங்களில் ஆப்பிரிக்க இசையில், ஐரோப்பிய உடலசைவுகளுடன் கலந்த கிசோம்பா போன்ற நடன வகை தோன்றியது.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia