கிச்சிலி
கிச்சிலி (Citrus) என்பது உரூடேசி குடும்ப பூக்கும் மரங்கள், குறுமரங்களடங்கிய உருடேசியே பேரினமாகும். இப்பேரினத்திலுள்ள தாவரங்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, நாரத்தை,பம்பளிமாசு (பப்ளிமாசு) உள்ளிட்ட முக்கிய பயிர்கள் புளிப்புச் சுவையுள்ள சிட்ரசு பழங்களை உருவாக்குகின்றன. அண்மைய ஆராய்ச்சி முடிவுகளின்படி சிட்ரசு தாவரங்களின் தாயகம் ஆத்திரேலியா, நியூ கலிடோனியா, நியூ கினியா ஆகும்.[1]. இருப்பினும் சில ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகளின்படி இதன் தாயகம் தென்கிழக்கு ஆசிய எல்லைகளான வடகிழக்கு இந்தியா, பர்மா (மியான்மார்), சீனாவின் யுன்னான் மாகாணம் ஆகியவையஆகும். [2][3][4].சில குறிப்பிட்ட வணிகவகை இனங்களான ஆரஞ்சு, மெண்டரின் தோடம்பழம் (mandarine Orange), எலுமிச்சை இப்பகுதியில் தோன்றியதாகும். பழங்காலத்திலிருந்தே சிட்ரசு பழங்கள் பரவலாக விளைவிக்கப்பட்டு வருகின்றன. வரலாறுபல்வேறு சமயங்களில் சிட்ரசு பழங்கள் ஆசியா (முதன் முதலாகப் பயன்பாட்டில் இருந்தது), ஐரோப்பா, புளோரிடா ஆகியவற்றை தாயகமாகக் கொண்டதாக அறியப்படுகிறது.ஆனால் ஐரோப்பிய ஆரஞ்சுப் பழங்கள் (கசப்பு ஆரஞ்சு) அலெக்சாண்டர் காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகும். அதே போல புளோரிடாவின் ஆரஞ்சு வகைகளும் எசுப்பானியத்தைத் தாயகமாகக் கொண்டதாகும்.பண்டைய உரோமானிய காலத்தில் எலுமிச்சை ஐரோப்பாவிற்கு கொண்டுவரப்பட்டது. பெயர்இதன் மூலப்பெயர் இலத்தீன மொழியிலிருந்து வந்ததாகும்.இப்பெயர் தற்போதுள்ள சிட்ரான் (சி. மெடிகா) அல்லது ஒரு ஊசியிலை கூம்பு மரத்தை குறிக்கிறது. இது சிடார் (cedar), κέδρος (kédros) என்ற ஒரு வகை மரத்தைக் குறிக்கும் கிரேக்க சொல்லுக்கும் தொடர்புடையதாகவும் உள்ளது. ஏனெனில் சிடார் மர இலைகள், பழங்களில் எலுமிச்சை போன்றதொரு வாசைனை காணப்படுகிறது. மொத்தத்தில் இவை உரோமானிய சொற்களிலிருந்து பெயரிடப்பட்ட சிட்ரசு பழங்கள் (புளிப்பு பழங்கள்) கொண்ட தாவரங்கள் என அறியப்படுகின்றன. படிமலர்ச்சிஇன்றைய பெரிய சிட்ரசு பழங்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிறிய, உண்ணத்தக்க சதைக்கனியியிலிருந்து முதலில் உருவானது. சிட்ரசு செடிகள் ஒரு பொதுவான மூதாதையிலிருந்து சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் விலகின. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia