கிடாரி (2016 திரைப்படம்)
கிடாரி (Kidaari), பிரசாத் முருகேசன் இயக்கத்தில், சசிகுமாரின் தயாரிப்பில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்படம்.[1] இத்திரைப்படத்தில் சசிகுமார், நிகிதா விமல் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களிலும் நெப்போலியன், சுஜா வருணி ஆகியோர் துணைப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எஸ். ஆர். கதிரின் ஒளிப்பதிவிலும், தர்புகா சிவாவின் இசையிலும், பிரவின் ஆண்டனியின் படத்தொகுப்பிலும் உருவாகியுள்ளது. இப்படம் 02 செப்தம்பர் 2016இல் வெளியானது. நடிப்பு
கதைஊரில் பெரிய தலக்கட்டைச்சார்ந்தவர், உள்ளூர் கொம்பையா பாண்டியன் (வேல இராமமூர்த்தி) கொம்பையா பாண்டியனின் அடியாள் கிடாரி (சசிகுமார்). கொம்பையா பாண்டியன் கழுத்தில் ஒருநாள் குத்துப்பட்டுக் கிடக்கிறார். உயிருக்குப் போராடும் அவரைக் குத்தியது யார்? என்னும் திருப்பத்தோடு கதை தொடங்குகிறது. ஒவ்வொரு கதைப்பாத்திரத்தின் மேலும் ஐயம் எழுகின்றது. கொம்பையா பாண்டியன் குத்தியவனை கிடாரி கண்டுபிடித்தாரா? இல்லையா என்பதே படத்தின் கதை.[2][3] படப்பணிகள்பிரசாத் முருகேசன் இயக்கும் இப்படத்தின் படப்பணிகளை சசிக்குமார் மார்ச்சு 2016 இல் சென்னையில் தொடங்கினார்.[4] இப்படத்தின் தலைப்பினை இயக்குநர் சமுத்திர்கனியிடம் இருந்து சசிகுமார் பெற்றார்.[5] இப்படத்தின் படப்பிடிப்பு மே 2016இல் 62 நாட்கள் படப்பிடிப்புடன் நிறைவடைந்ததாகவும், படம் இறுதிக்கட்டத்திற்கு சென்றுள்ளதாகவும் இப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்தார்[6][7] இசைஇத்திரைப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். சான்றுகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia