கிம் கொட்டன்
கிம் கொட்டன் (பிறப்பு: 24 பெப்ரவரி 1978) ஒரு நியூசிலாந்து துடுப்பாட்ட நடுவர் ஆவார்.[1][2][3] ஆகத்து 2018 இல், அவர் 2018-19 ஐசிசி உலக இருபது20 கிழக்கு ஆசியா-பசிபிக் தகுதிப் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றினார். அடுத்த மாதம் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை நடுவர்களின் மேம்பாட்டுக் குழுவில் சேர்க்கப்பட்டார்.[4][5][6] நடுவர் தொழில்அக்டோபர் 2018 இல், 2018 ஐசிசி பெண்கள் உலக இருபது20 போட்டிக்கான பன்னிரண்டு கள நடுவர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார்.[7] பிப்ரவரி 2020 இல், ஆஸ்திரேலியாவில் 2020 ஐசிசி மகளிர் இருபது20 உலகக் கோப்பையில் கடமையாற்றும் நடுவர்களில் ஒருவராக ஐசிசி அவரை நியமித்தது.[8] இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான இரண்டு கள நடுவர்களில் ஒருவராகக் கொட்டன் பெயரிடப்பட்டார்.[9] பிப்ரவரி 2022 இல், நியூசிலாந்தில் நடைபெறும் 2022 மகளிர் துடுப்பாட்ட உலகக் கோப்பை கள நடுவர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார்.[10][11] ஏப்ரல் 1, 2022 அன்று, இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான கள நடுவர்களில் ஒருவராக கொட்டன் நியமிக்கப்பட்டார்.[12] 5 ஏப்ரல் 2023 அன்று, இலங்கை நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நியூசிலாந்து மற்றும் இலங்கை இடையேயான தனது முதல் ஆண்கள் இருபது20 பன்னாட்டுப் போட்டியில் அவர் கடமையாற்றினார்.[13] கொட்டன் முழு உறுப்பினர் அணிகளுக்கிடையிலான ஆண்கள் இருபது20 போட்டியில் கள நடுவராக நின்ற முதல் பெண் ஆனார்.[14] செப்டம்பர் 2024 இல், 2024 ஐசிசி பெண்கள் இருபது20 உலகக் கோப்பைக்கான அனைத்து பெண் அலுவல் குழுவின் உறுப்பினராக அவர் பெயரிடப்பட்டார்.[15] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia