கிரனோபிள்
கிரனோபிள் (Grenoble, பிரெஞ்சு உச்சரிப்பு: [ɡʁə.nɔbl]; அருபித: Grenoblo) பிரான்சு நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் பிரான்சிய ஆல்ப்சு அடிவாரத்தில் டிராக் ஆறு ஐசரெ ஆற்றுடன் கூடுமிடத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். ரோன்-ஆல்ப்சு பிராந்தியத்தில் அமைந்துள்ள கிரனோபிள் ஐசரெ திணைக்களத்தின் தலைநகரமாக விளங்குகிறது. மலைத்தொடருக்கு அண்மையில் இருப்பதாலும் நகரின் அளவைக் கொண்டும் இது "ஆல்ப்சின் தலைநகரம்" என பிரான்சு நாட்டில் அறியப்படுகிறது. கிரனோபிளின் வரலாறு 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. ஒரு சிறிய காலிய சிற்றூராக இருந்த கிரனோபிள் 11வது நூற்றாண்டில் டவுஃபீனின் தலைநகரமாக ஆனபிறகு இதன் மதிப்புக் கூடியது. வரலாற்றில் பெரும்பாலும் இது பிரான்சு இராச்சியத்தின் எல்லையில் அமைந்திருந்த எளிமையான நகராட்சியாகவும் அரண்காவல் கோட்டை நகரமாகவும் விளங்கியது. மிக விரைவான தொழில் வளர்ச்சியால் இதன் முதன்மை பெருகியது. இங்கு கையுறைத் தயாரிப்புத் தொழில் 18வது,19வது நூற்றாண்டுகளில் முதன்மையாக இருந்தது. பின்னர் 19வது இருபதாவது நூற்றாண்டுகளில் புனல் மின்நிலையங்கள் அமையத் தொடங்கின. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1968இல் X ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுகள் இங்கு நடைபெற்றன. இந்நகரம் தற்போது ஐரோப்பாவின் குறிப்பிடத்தக்க அறிவியல் மையமாக விளங்குகிறது.[1][2] 2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கிரனோபிளின் மக்கள்தொகை 156,659ஆக இருந்தது. அவ்வாண்டில் கிரனோபிள் பெருநகரப் பகுதியின் (பிரெஞ்சு: aire urbaine de Grenoble) மக்கள்தொகை 664,832 ஆகவிருந்தது. நகரக் குடிமக்கள் "கிரனோபிளாய்" (Grenoblois) என்று அழைக்கப்படுகின்றனர். நகரக் காட்சிகள்![]() ![]() ![]() மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia