குளிர்சாதன முதல் வகுப்பு, இரண்டடுக்கு, மூன்றடுக்கு குளிர்சாதன தூங்கும் வசதிப்பெட்டி, முன்பதிவற்ற பெட்டி
இருக்கை வசதி
உள்ளது
படுக்கை வசதி
உள்ளது
உணவு வசதிகள்
உள்ளது
காணும் வசதிகள்
பெரிய, சிறிய சாளரங்கள்
சுமைதாங்கி வசதிகள்
Luggage-cum-Brake Van
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை
1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்
சராசரியாக 61.78 km/h (38.39 mph) (நிறுத்தங்களுடன்)
வழிகாட்டுக் குறிப்புப் படம்
கிராண்ட் டிரங்க் விரைவுவண்டி ( Grand Trunk Express) தினமும் செயல்படும் ஒரு அதிவிரைவு தொடர்வண்டி ஆகும். புது டெல்லி தொடர்வண்டி நிலையத்தில்[1] இருந்து சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்வரை செல்லும் இந்தத் தொடருந்து இந்திய ரயில்வேயினால் இயக்கப்படுகிறது. வரலாற்று சிறப்புகள் வாய்ந்த மற்றும் பழம்பெருமைகள் நிறைந்த தொடர்வண்டிகளில் இதுவும் ஒன்று. இதன் வண்டி எண் 12615/12616. 12615 என்ற வண்டி எண்ணுடன் சென்னை முதல் புது டெல்லி வரையிலும், 12616 என்ற வண்டி எண்ணுடன் புது தில்லி முதல் சென்னை வரையிலும் கிராண்ட் டிரங்க் விரைவுத் தொடர்வண்டி செயல்படுகிறது.
வரலாறு
புது டெல்லி தொடருந்து நிலையத்துக்கருகில் கிராண்ட் டிரங்க் விரைவுவண்டி
1929 ஆம் ஆண்டு தென்னக[2] மற்றும் சென்னை ரயில்வேயினால் இந்த வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது பெஷாவர், பாகிஸ்தான் மற்றும் மங்களூர் (தற்போதைய இடங்கள்) ஆகிய இடங்களை இணைக்கும் விதமாக இதன் வழித்தடங்கள் அமைந்தது. அத்துடன் இதன் வழிப்பாதைகள் புது டெல்லி மற்றும் சென்னையின் வழியாகவும் இருந்தது. சிலவேளைகளில் லாகூர் மற்றும் மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர் அருகே) ஆகியவற்றிற்கு இடையிலும் இயங்கி வந்தது. அந்த காலகட்டத்தில் நெடுந்தூரப் பயணங்களைக் கொண்ட ரயில் வண்டிகளில் முக்கியமானதாக கிராண்ட் டிரங்க் விரைவுவண்டி இருந்தது.[3][4]
ஆரம்ப காலத்தில் வழிப்பாதைகள் மற்றும் நேரங்களில் மாற்றங்கள் இருந்தாலும், அதன்பின்னர் இந்தியத் தலைநகரான புது டெல்லிக்கும், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கும் இடையில் தினமும் இயக்கப்படுவது என்று உறுதியானது. 2,186 கிலோ மீட்டர்களைக் கடக்கும் இந்த ரயிலின் மொத்த பயண நேரம் 35 மணி நேரம் மற்றும் 35 நிமிடங்கள். இதில் 38 நிறுத்தங்களும் அடங்கும். தற்போதும், நெடுந்தூரப் பயணங்களுக்கான தொடருந்துகளில் இது முக்கியமான ஒன்றாகும்.
வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்
எண்
நிலையத்தின் பெயர் (குறியீடு)
வரும் நேரம்
புறப்படும் நேரம்
நிற்கும் நேரம் (நிமிடங்கள்)
கடந்த தொலைவு (கி.மீ)
நாள்
பாதை
1
சென்னை சென்ட்ரல் (MAS)
தொடக்கம்
19:15
0
0
1
1
2
கூடூர் சந்திப்பு (GDR)
21:30
21:32
2
138
1
1
3
நெல்லூர் (NLR)
21:56
21:58
2
176
1
1
4
ஒங்கோல் (OGL)
23:23
23:25
2
292
1
1
5
சீராலா (CLX)
00:01
00:02
1
342
2
1
6
பாபட்லா (BPP)
00:12
00:13
1
357
2
1
7
தெனாலி சந்திப்பு (TEL)
00:44
00:45
1
399
2
1
8
விஜயவாடா சந்திப்பு (BZA)
01:55
02:05
10
431
2
1
9
கம்மம் (T)
03:18
03:20
2
532
2
1
10
வரங்கல் (WL)
04:58
05:00
2
639
2
1
11
ராமகுண்டம் (RDM)
06:18
06:20
2
740
2
1
12
மன்சிர்யாலா (MCI)
06:33
06:34
1
754
2
1
13
சிர்பூர் காகச்நகர் (SKZR)
07:23
07:25
2
812
2
1
14
பலஹர்ஷா (BPQ)
08:45
08:55
10
881
2
1
15
சந்திரபூர் (CD)
09:14
09:15
1
895
2
1
16
ஹிங்காங்காட் (HGT)
10:17
10:18
1
979
2
1
17
சேவாக்ரம் (SEGM)
10:59
11:00
1
1016
2
1
18
நாக்பூர் (NGP)
12:15
12:25
10
1093
2
1
19
நார்கேர் (NRKR)
13:30
13:31
1
1178
2
1
20
பந்தூஉர்னா (PAR)
13:49
13:50
1
1196
2
1
21
அம்லா சந்திப்பு (AMLA)
14:55
14:57
2
1260
2
1
22
பெடுல் (BZU)
15:16
15:17
1
1283
2
1
23
கோரடோங்க்ரி (GDYA)
15:58
15:59
1
1319
2
1
24
இடரசி சந்திப்பு (ET)
17:15
17:20
5
1390
2
1
25
ஹோஷங்கபாத் (HBD)
17:38
17:40
2
1407
2
1
26
ஹபிப்காஞ்ச் (HBJ)
18:45
18:47
2
1475
2
1
27
போபால் சந்திப்பு (BPL)
19:20
19:30
10
1481
2
1
28
விதிஷா (BHS)
20:07
20:09
2
1535
2
1
29
காஞ்ச் பசோடா (BAQ)
20:38
20:40
2
1574
2
1
30
பினா சந்திப்பு (BINA)
21:25
21:30
5
1620
2
1
31
ஜான்சி சந்திப்பு (JHS)
23:30
23:42
12
1772
2
1
32
குவாலியர் (GWL)
00:50
00:55
5
1869
3
1
33
மோரெனா (MRA)
01:21
01:22
1
1908
3
1
34
தௌல்பூர் (DHO)
01:46
01:47
1
1935
3
1
35
ஆக்ரா காண்ட் (AGC)
02:45
02:50
5
1988
3
1
36
ராஜா கி மண்டி (R)
02:57
02:59
2
1992
3
1
37
மதுரா சந்திப்பு (MTJ)
03:45
03:50
5
2042
3
1
38
ஃபரிதாபாத் (FDB)
05:20
05:22
2
2154
3
1
39
எச் நிஸாமுதீன் (NZM)
06:00
06:02
2
2175
3
1
40
புது டெல்லி (NDLS)
06:30
முடிவு
0
2182
3
1
பிற ரயில்களுடனான ஒப்பீடு
தற்போது கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் புது டெல்லி மற்றும் சென்னைக்கு இடையே செயல்படுகிறது. இது 34 வழிநிறுத்தங்களைக் கொண்டது (முடியும் இடத்தினைச் சேர்க்காமல்). இதே வழித்தடத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வெறும் 9 வழிநிறுத்தங்களுடன் செயல்படுகிறது. அதேபோல் இதே வழிப்பாதையில் செல்லும் பிற ரயில்களும் வெவ்வேறான கால அட்டவணையில் செயல்பட்டாலும், வித்தியாசமான வழிநிறுத்தங்களின் எண்ணிக்கையினைக் கொண்டுள்ளன.[5]