கிராமக் கல்விக் குழு

கிராமக்கல்விக் குழு

கிராமக் கல்விக் குழு (Village Education Committee) என்பது இந்தியாவில் அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளா்ச்சி பேணப்பட உருவாக்கப்பட்ட குழு ஆகும். கிராமக்கல்விக்குழுவின் தலைவராக ஊராட்சி மன்றத் தலைவா் அல்லது வார்டு உறுப்பினர்கள் செயல்படுவா். அந்தந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செயலாளராக இருப்பா். கல்விக்குழுவில் இருபது உறுப்பினர்கள் செயல்படுகின்றனர்.

செயல்பாடுகள்

  1. வயதுக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல்.
  2. பள்ளியில் சோ்ந்த மாணவா்கள் இடையில் நின்று விடாமல் காத்தல்.
  3. பள்ளிக்குத் தேவையான கூடுதல் கட்டடம் அளித்தல்.
  4. குடிநீா் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி, சுற்றுச் சுவர், தளவாட சாமான்கள் போன்ற வசதிகளைச் செய்து தருதல்.
  5. குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்.
  6. பள்ளியின் கல்வித்தரம் மேம்படத் திட்டமிட்டுச் செயல்படுதல்.
  7. பள்ளி விழாக்களை நடத்துதல்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ் நாடு அரசு பாடநுால் கழகம் ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் பக்க எண் 114 - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya