கிருஷாங்கினி

க்ருஷாங்கினி என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவரது இயற்பெயர் பிருந்தா ஆகும். இவரது கணவர் பெயர் நாகராஜன் ஆகும். இவர் கோவை மாவட்டம் தாராபுரத்தைச் சார்ந்தவர் ஆவார். இவர் 1982 ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார். இவர் கானல் சதுரம் (1998), கவிதைகள் கையெழுத்தில் (2001) ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். காவ்யா பதிப்பகத்தின் வெளியீடான பறத்தல் அதன் சுதந்திரம் (2001) எனும் பெண் கவிஞர்களின் கவிதைகள் தொகுப்பாசிரியர் ஆவார். இவர் ஓவியங்கள் குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் ஒரு பெண்ணிய செயற்பாட்டாளர் ஆவார்.[1][2]

மேற்கோள்கள்

  1. "க்ருஷாங்கினி". தமிழ் நெஞ்சம். Retrieved 14 மே 2019.
  2. "க்ருஷாங்கினி கவிதைகள்". திண்ணை. Retrieved 14 மே 2019.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya