கிருஷ்ண மோகன் சேத்
கிருஷ்ண மோகன் சேத் (Krishna Mohan Seth) இந்தியத் தரைப்படையின் துணைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்று சத்தீசுகர், மத்திய பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலங்களின் ஆளுநராக பணிபுரிந்தவர் ஆவார். குடும்ப வாழ்க்கைகிருஷ்ண மோகன் சேத் டிசம்பர் 19, 1939 அன்று அலகாபாத்தில் பிறந்தார்.[1] இவருக்கு வீணா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இராணுவ பணிலெப்டினன்ட் ஜெனரல் சேத் இந்திய ராணுவத்தின் பீரங்கி படையில் நியமிக்கப்பட்டார். இவர் மார்ச் 1979 மற்றும் அக்டோபர் 1980 க்குஇடையில்[2] (வான்குடை) படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கினார். இவர் போபாலில் 21வது தாக்குதல் படைப்பிரிவினை வழிநடத்தியவர்.[3] இதைத் தொடர்ந்து அக்டோபர் 1994 மற்றும் அக்டோபர் 1995க்கு இடையில் நாகாலாந்தில் 3வதுப் படைப்பிரிவின் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5] பின்னர் துணை தலைமையதிகாரியாக நியமிக்கப்பட்டார். சேத் 31 திசம்பர் 1997 அன்று இராணுவ பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.[1] அரசியல் வாழ்க்கைசேத் 23 சூன் 2000 முதல் 31 மே 2003 வரை திரிபுராவின் ஆளுநராக இருந்தார்.[6] இதைத் தொடர்ந்து 2 சூன் 2003 முதல் 25 சனவரி 2007 வரை சத்தீசுகர் ஆளுநராகப் பதவி வகித்தார். சத்தீசுகரின் காங்கரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அடர்வன போர் பள்ளியானது, இவரது ஆட்சிக் காலத்தில் இவரது சிந்தனையின் அடிப்படையில் உருவானது.[7] ![]() இவர் 2 மே 2004 மற்றும் 29 சூன் 2004 இடையே மத்திய பிரதேசத்தின் ஆளுநராகப் பொறுப்பிலிருந்தார்.[8][9] ![]() முக்கிய இராணுவ விருதுகள்
இவர் பன்னாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி குழுவின் ஆசிய திரைப்பட தொலைக்காட்சி அகதமியின் வாழ்நாள் உறுப்பினராகவும் உள்ளார்.[11] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia