எல்லன் பொம்பியோ சாண்ட்ரா ஓ காதரீன் ஹைக்ல் ஜஸ்டின் சாம்பர்ஸ் டி.ஆர்.நைட் சந்திரா வில்சன் ஜேம்ஸ் பிக்கென்ஸ்,ஜூனியர் கேட் வால்ஷ் சாரா ராமிரேஸ் எரிக் டேன் கைலர் லே புரூக் ஸ்மித் கெவின் மக்கிட் ஜெசிகா காப்ஷா கிம் ராவர் ஜெஸ் வில்லியம்ஸ்[1] சாரா ட்ரூ[2] ஐசையா வாசிங்டன் பாட்ரிக் டெம்ப்சி
கிரேஸ் அனாடமி என்பது (Grey's Anatomy) அமெரிக்காவில் பரவலாக பார்க்கப்படும் மருத்துவத்துறை தொடர்புள்ள ஓர் தொலைக்காட்சித் தொடர். வாஷிங்டன், சியாட்டிலில் உள்ளதாகப் புனையப்பட்ட சியாட்டில் கிரேஸ்-மெர்சி மருத்துவமனையில் மருத்துவக் கல்வி பெறும் பயிற்சி மருத்துவர்கள்,மாணவ மருத்துவர்கள் மற்றும் அவர்களது ஆசிரியர்களின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டத் தொடராகும். இதன் முதல் நிகழ்வு "ஓர் கடினமான நாளின் இரவு" (A Hard Day's Night) மார்ச் 27,2005 அன்று ஏபிசி நிறுவனத்தால் ஒளிபரப்பப் பட்டது. அதுமுதல் ஆறு பருவங்கள் ஒளிபரப்பாயுள்ளன. ஏழாவது பருவத்தின் முதல் நிகழ்வு 23 செப்டம்பர்,2010 அன்று ஒளிபரப்பானது.[3]
பலராலும் பாராட்டப்பட்டும் வணிக வெற்றியாகவும் திகழும் இத்தொடர் துவக்கத்தில் பாஸ்டன் லீகல் என்ற தொடரின் பருவங்களுக்கிடையேயான இடைவெளிக்காக தயாரிக்கப்பட்டது. முதல் நிகழ்விற்கே 16.25 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்து[4] முதல் பருவ இறுதியில் 22.22 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருந்தது.[5] மூன்று எம்மி விருதுகளையும் இரண்டு கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்று முதன்மை நேரத்தில் காண்கின்ற தொலைக்காட்சித் தொடர்களில் மிகக் கூடுதலாக பார்க்கப்படும் தொடராக இருந்து வருகிறது.